சுவிஸ் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை: பெருகும் ஆதரவு!

பயங்கரவாதிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் சுவிட்சர்லாந்தில் தற்போது வலுப்பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான மக்கள் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் சுமார் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஸ்காண்டிநேவிய சுற்றுலாப்பயணிகள் இருவர் மொரோக்கோ நாட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2018 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் இரு சுவிஸ் நாட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த ஜெனீவா நகரை சேர்ந்தவர்கள் எனவும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் கைதான அந்த இரு சுவிஸ் நாட்டவர்களுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என சுவிஸ் பொதுமக்களில் 45 சதவிகித ஆண்களும் 34 சதவிகித பெண்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.