சமூக வலைத்தளங்களில் அதிகளவு பதிவிறக்கத்தை பெற்ற செயலிகள்!

சமூக வலைத்தளங்களில் இருக்கும் முகநூல் மற்றும் வாட்சப் வலைத்தளங்கள் வெளியான நாட்களில் அதிகளவில் மக்களால் உபயோகம் செய்யப்பட்டது. இந்த செயலிகளை அடுத்தபடியாக பல செயலிகள் உருவாக்கப்பட்டாலும்., தற்போது சுமார் 100 கோடி நபர்களுக்கு அதிகமான பதிவிறக்கத்தை பெற்றுள்ளது.

சீனாவில் இருக்கும் பைட்டன்ஸ் நிறுவனமானது முகநூல் செயலுக்கு கடும் போட்டியாக அமைந்தது. இதே போன்று இருக்கும் வீடியோ சார்ந்த செயலிகளான ஸ்னாப்ஷாட் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் பின் தங்கியுள்ளது.

100 கோடி நபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலியின் மூலமாக பல்வேறு மொழிகளும் அடக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை தொடர்ந்து புதிய நபர்கள் அதிகளவில் உபயோகம் செய்து வரும் நிலையில்., மேலும் இந்த எண்ணிக்கையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டிக் டாக் செயலியை சுமார் 100 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக டவர் ஸ்டோர் எனும் செயலி தகவல் சேவை மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விஷயம் குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் கடந்த 2018 ம் வருடம் வரை சுமார் 66.3 கோடி நபர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ததாகவும்., அதே வருடத்தில் முகநூலை 71.1 கோடி நபர்கள் பதிவிறக்கம் செய்ததாகவும்., இன்ஸ்டாகிராம் செயலியை 44.4 கோடி நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த செயலி 2018 ம் வருடத்தில் பிரபலமாகி அதிகளவில் பதிவிறக்கத்தை பெற்று சுமார் நான்காவது இடத்தை தக்க வைத்துள்ளது என்றும்., கூகுளின் பிளே ஸ்டோர் பக்கத்தில் மூன்றாவது இடத்தையும்., அமெரிக்க நாட்டில் விளையாட்டு அல்லாத பதிவிறக்கத்தில் முதல் இடத்தையும் தக்க வைத்துள்ளது.