2013-ல் இங்கிலாந்தில் மூளையின்றி பிறந்த குழந்தை: தற்போது ஆச்சரியப்பட வைத்த நிகழ்வு

இங்கிலாந்தில் 2013 ஆண்டு பிறந்த குழந்தை, மூளையில்லாமல் பிறந்த நிலையில் தற்போது ஆரோக்கியமாக இருப்பது ஆச்சரியபட வைத்துள்ளது.

இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியான கம்ப்ரியாவைச் சேர்ந்த ராப், ஷெல்லி தம்பதியினருக்கு கடந்த 2013ம் ஆண்டில் குழந்தை பிறக்கும்போது மூளைப் பகுதியில் மிக குறைந்த அளவில் மட்டும் வளர்ச்சி இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு நோவாவெல் என பெயரிடப்பட்டது. மூளை வளர்ச்சி குறைபாடுடன் இருந்ததால், பார்க்கும் திறன், பேசும் மற்றும் கேட்கும் திறனின்றி குழந்தை காணப்பட்டது. பின்னர், நோவாவை ஆஸ்திரேலிய மருத்துவர்களின் கண்காணிப்பில் பெற்றோர் வளர்க்க திட்டமிட்டு மருத்துவர்களைஅணுகினர்.

3 வயதுக்குப் பின்தான் நோவாவுக்கு, சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழக்கப்பட்டது. இந்தசிகிச்சையின் பலனாக மூளை வளர்ச்சி விகிதம் அதிகமானது. அதனைத் தொடர்ந்து அந்தச் சிறுவனுக்கு பார்க்கவும், மேலும் பேசவும் இயலும் அளவிற்கு தற்போது முன்னேறி உள்ளான். மருத்துவர்களால்தற்போது எழுதும் பயிற்சியும் சிறுவனுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்கு முன்பு மூளையின்றி பிறந்த குழந்தைகள் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உயிர் வாழும்நிலை இருந்துள்ளதால், தற்போது நோவா 6 ஆண்டுகளைத் தாண்டி வாழ்ந்து வருவது மருத்துவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.