சிறுவனுக்கு ஏற்பட்ட பயங்கரம்! கதறி துடிக்கும் குடும்பத்தார்!

பொலன்னறுவை – புலஸ்திபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் டினர் அடைக்கப்பட்டிருந்த போத்தல் ஒன்று வெடித்ததில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது காயமடைந்த 16 வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த போத்தலை உடைக்க முற்பட்ட போதே நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அவர் கிண்ணியா – காக்காமுனை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு காய்ச்சல் காரணமாக குறித்த சிறுமி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.