வடக்கின் தற்போதைய நிலை? (படங்கள்)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கவும், ஐ.நாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று வடக்கு முழுமையாக முடங்கியுள்ளது.

வடக்கின் அனைத்து பிரதேசங்களிலும் கதவடைப்பு இடம்பெறுகிறது. போக்குவரத்துக்கள் இடம்பெறவில்லை. தனியார் நிறுவனங்கள் இயங்கவில்லை. பாடசாலைகள் இயங்கவில்லை.

வவுனியா

வவுனியாவில் முஸ்லிம் வர்த்தகர்களும் கதவடைப்பிற்கு ஆதரவளித்துள்ளனர். அதனால் நகரம் முற்றாக முடங்கியது. சில பாடசாலைகளில் குறைந்தளவான மாணவர்கள் பிரசன்னமாகியுள்ளனர். உள்ளூர் போக்குவரத்துக்கள் இடம்பெறவில்லை. தூர இடங்களிற்கான போக்குவரத்து மட்டுப்பட்ட அளவில் இடம்பெறுகிறது. முச்சக்கர வண்டிகளும் இன்று பணியில் ஈடுபடவில்லை. புகையிரத கடவை கப்பாளர் சங்கம் என்பனவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

யாழ்ப்பாணம்

உள்ளூர் பேரூந்து சேவைகள் இடம்பெறவில்லை. பாடசாலைகள் இயங்கவில்லை. அனைத்து உள்ளூர் நகரங்களும் முடங்கியுள்ளன.

மாங்குளம்

கிளிநொச்சி

மன்னார்

மன்னாரில் அரச, தனியார் போக்குவரத்து சேவைகள் இயங்கவில்லை. வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, நகரம் முழுமையாக முடங்கியுள்ளது. பெரும்பாலான அரச நிறுவனங்களும் இயங்கவில்லை.