கதி கலங்கும் கார்பரேட்டுகள்.. தமிழக மக்கள் எடுத்த அசத்தல் முடிவு..?

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை காரணமாக நெல்லையில்மண் குவளைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு டிச.31-ம் தேதியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதால் மண் குவளை, டம்ளர், கிண்ணம் போன்றவற்றிற்கு கேட்டரிங் நிறுவனத்தினர் மற்றும்ஸ்டார் ஓட்டல்களில் இருந்து ஆர்டர்கள் வருவதால் மண் பாண்ட உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு புற்றீசல் போல் வளர்ந்தது. இதனால் நிலத்தில் மாசு ஏற்படுதல், பிளாஸ்டிக் கவர்களை உண்ணும் கால்நடைகளுக்கு பாதிப்பு, சூடான உணவுகளை பிளாஸ்டிக் பைகளில் வாங்கிபயன்படுத்துவதால் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் பரவும் நிலை ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.

ஏற்கனவேகுறைந்த மைக்ரான் எடையுள்ள பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் கப்புகளை பயன்படுத்த தடை இருந்தாலும் அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

இதனால் கட்டுப்பாடில்லாமல் எல்லாத் துறைகளிலும் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருளாக மாறியது.இந்நிலையில் 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல்தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழு தடை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.

எல்லாவிதமான பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தக் கூடாதுஎன அரசு அறிவித்துள்ளது. இதற்கான மாற்று பயன்பாட்டுப்பொருட்களையும் அறிவித்துள்ளது.

இதனை செயல்பாட்டிற்கு கொண்டுவர பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக பிளாஸ்டிக்கை தவிர்க்கும் மனநிலைக்கு குறிப்பிட்ட சதவீத மக்களும் நிறுவனங்களும் மாறி வருகின்றன. சிலர் வீடுகளில் இருந்து பாத்திரங்களை எடுத்துச்சென்று உணவு வாங்குகின்றனர்.

குறிப்பாக கேட்டரிங் தொழில்செய்யும் நிறுவனங்கள், ஸ்டார் ஓட்டல் நடத்துபவர்கள் உள்ளிட்டபல துறையினர் இதுவரை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பாரம்பரியம் மிக்க மண்பாண்ட பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உணவு தயாரித்து வழங்கும் போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட அட்டை கப்புகளை பயன்படுத்துவதற்கு பதிலாக மண் டம்ளர், குவளை, கிண்ணம் போன்றவைகளை பயன்படுத்துகின்றனர்.

பாதாம்பால் உள்ளிட்ட பானங்களும், குளிர்பானங்களும் ஊற்றி வழங்கமண் டம்ளர்களும், ஐஸ்கிரீம் வழங்க மண் குவளையும் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று ஸ்டார் ஓட்டல்களில் குடிநீர் வைப்பதற்கு மண் பாட்டில், ஜார் மற்றும் உணவு வழங்க மண்ணால் செய்யப்பட்ட கிண்ணங்களை பயன்படுத்துகின்றனர்.

இதற்காக மண்பாண்ட உற்பத்தியாளர்களிடம்ஆர்டர்கள் வழங்கப்படுவதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே மும்பை போன்ற வட மாநிலங்களில்பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.