மாமியாரின் மோசமான நடத்தை: சுவரில் எழுதிவிட்டு மருமகன் எடுத்த விபரீத முடிவு

தமிழகத்தில் மாமியாரும் மைத்துனர்களும் அடித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் ராஜி (24) கார் ஓட்டுனர். இவரது மனைவி பிரீத்தி (23) நேற்று முன்தினம் இரவு, தம்பதி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மனமுடைந்த பிரீத்தி, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட குடும்பத்தினர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து ராஜி, மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கிருந்த அவரது மைத்துனர்கள் பசுபதி, பவித்ரன், மாமியார் லதா ஆகியோர், ராஜியை தகாத வார்த்தைகளால் பேசியதோடு அடித்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மாமியார் மற்றும் மைத்துனர்கள் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதால் மனமுடைந்த ராஜி அன்றிரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்வதற்கு முன், வீட்டு சுவரில், என் சாவுக்கு, மைத்துனர் மற்றும் மாமியார் தான் காரணம் என, எழுதி வைத்திருந்தார்.

இது குறித்து புழல் பொலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.