3 வயதில் ரூ.18 கோடிக்கு அதிபதி! குழந்தையின் பின்னணி என்ன தெரியுமா?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் 3 வயது பேரன் நரா தேவனேஷின் சொத்து மதிப்பு ரூ.18 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆண்டுதோறும் தன் சொத்துகணக்கை வெளியிட்டு வருகிறார்.

இந்த ஆண்டுக்கான சொத்து மதிப்பை சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோகேஷ் வெளியிட்டார். அதன்படி சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 81.83 கோடி ஆகும்

இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு மட்டும் ரூ.8.30 கோடிக்குச் சொத்து உள்ளது. அவருக்குக் கடன் ரூ. 5.31 கோடி உள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஷ்வரிக்கு ரூ.31.01 கோடி சொத்து உள்ளது. இவருக்கு ரூ.22.25 கோடி கடனும் இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக 3 வயதே ஆன சந்திரபாபுவின் பேரன் நரா தேவனேஷ் பெயரில் ரூ.18.71 கோடிக்குச் சொத்து உள்ளது.

இதன்மூலம் வெறும் மூன்று வயதில் ரூ.18 கோடிக்கு நரா அதிபதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.