ரணிலின் கடும் எச்சரிக்கை!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உயர் நீதிமன்றத்திலும் ஏனைய நீதிமன்றங்களிலும் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் உரிய முறையில் தகவல்கள் தெரியாமல் அது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு ரணில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில தினங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்களில் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்த கருத்துக்களை அவதானித்ததன் பின்னர் இந்த அறிவிப்பை ரணில் விடுத்துள்ளார்.

முக்கிய விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போது, பொறுப்புடன் மற்றும் வழிப்புணர்வுடன் கருத்து வெளியிட வேண்டும்.

உரிய விடயம் தொடர்பில் போதுமான அறிவின்றி கருத்து தெரிவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் ஊடக அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.