பிரித்தானியாவில் சமீபத்தில் போதைப்பொருளால் கொல்லப்பட்ட பிரபுக்கள் குலத்தைச் சேர்ந்த Lady Beth Douglas (18) என்னும் இளம்பெண்ணின் மரணம் குறித்த சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு வயலின் மேதையாக இருந்த ஒரு இளம்பெண்ணை ஒரு பாலியல் தொழிலாளியாக மாற்றுவதில் பிரபல சமூக ஊடகங்களின் பங்கு என்ன என்பதை இச்செய்தி விவரிக்கிறது.
தைவானைச் சேர்ந்த Hsueh-Chun Liao, லண்டன் வந்த போது பிரபுக்கள் குலத்தைச் சேர்ந்த Sir David Harrington Angus Douglasஐ சந்தித்தாள்.
இரு முறை விவாகரத்து பெற்ற 70 வயதை நெருங்கிக் கொண்டிருந்த அவரை சந்தித்ததும், இருவருக்கும் காதல் மலர்ந்தது. அவ்விருவருக்கும் பிறந்தவர்தான் Lady Beth Douglas.
மிக இளம் வயதிலேயே வயலின் வாசிப்பதில் சிறந்து விளங்கிய Douglasஇன் வாழ்வில் திடீரென சூறாவளி வீசத் தொடங்கியது. அவளுக்கு 8 வயது இருக்கும்போது அவளது பெற்றோர்கள் பிரிந்தனர்.
தாயுடன் வடக்கு லண்டனில் அவர்கள் வாழ்ந்து வரும்போது, Douglasஇன் சகோதரன் Milo மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டான். அந்த மரணம் அவளை மிகக் கடுமையாக பாதித்தது.
அந்த பாதிப்பிலிருந்து கடைசி வரை அவள் வெளிவரவேயில்லை, மன நல சிகிச்சை பெற்ற பின்னரும்.
அண்ணனுக்கு என்னென்ன மன நல பிரச்சினைகள் இருந்தனவோ அதே பிரச்சினைகளால் Douglasம் பாதிக்கப்பட்டாள்.
அவளுக்கு 14 வயதாகும்போது அவளை விட மிகவும் மூத்த ஒரு நபரால் அவள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாள். அது அவளை இன்னும் அதிகம் பாதித்தது.
சட்டென தனது இசை ஆர்வத்தை தூக்கி வீசிவிட்டு போதை பொருட்கள் பக்கம் திரும்பினாள் Douglas. போதை பொருட்கள் வாங்க பணம் தேவைப்பட்டது.
ட்விட்டரில் கணக்கு ஒன்றை ஆரம்பித்த Douglas, தன்னை வெப்கேமில் நிவாணமாக காட்டுவதற்காக 20 பவுண்டுகள் வசூலிக்க ஆரம்பித்தாள்.

கடைசியில் அது அவளை பாலியல் தொழிலில் கொண்டு போய் விட்டது. ட்விட்டர் வழியாக ஆண்களுக்கு அழைப்பு விடுத்து தன்னை ஒரு முழு நேர பாலியல் தொழிலாளியாகவே மாற்றிக் கொண்டாள் Douglas, போதைப்பொருட்களுக்காக.
ஒரு இளம் வயலின் கலைஞரை பாலியல் தொழிலாளியாக மாற்ற சமூக ஊடகங்கள் தளம் அமைத்து கொடுத்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை பிடிக்க உதவ ட்விட்டரும், போதைப்பொருள் பழக்கம் உடையவர்களை, பாலியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஸ்கைப்பும் எப்படி அனுமதிக்கின்றன என கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.






