வறுமையின் பிடியில் சிக்கி உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர்….

மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன் போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் பிஎஸ் வீரப்பா.

நடிகராக மட்டுமல்லாமல் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டிருந்தார்.

இவரது மகன் பிஎஸ்வி ஹரிஹரன் 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். ஆனால் கடும் நஷ்டம் காரணமாக மொத்த சொத்தையும் இழந்தார்.

சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரின் வறுமை பற்றி அறிந்து பிரபல தயாரிப்பாளர் தாணு 1 லட்ச ருபாய் உதவி செய்திருந்தார்.

இந்நிலையில் சில மாதங்கள் முன்பு வீட்டில் தடுமாறி கீழே விழுந்து அவருக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது. சிகிச்சை பெற்று வந்த ஹரிஹரன் நேற்று மூச்சு திணறலால் உயிரிழந்துள்ளார்.