சிதிலமடைந்த கிராமம்…! பார்வையிட வருவார்களா? ஆட்சியாளர்கள்….!

தமிழகத்தில் எப்போதுமே, நாகபட்டினத்தில் தான், அநேக வருடங்களில் புயல் வந்திருக்கிறது. ஆனால், சமீபத்திய காலங்களில், புயலின் பாதிப்பில்லாமல் இருந்த, இந்த மாவட்டம், தற்போது வரலாறு காணாத துயரத்தைச் சந்தித்துள்ளது.

இந்த மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், மிகப் புகழ் வாய்ந்த ஊர். தமிழகத்தில் உப்புச் சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது, இந்த ஊரில் உள்ள கடற்கரையில் தான் உப்புக் காய்ச்சப் பட்டது.

அப்படிப்பட்ட புகழ் வாய்ந்த இந்த ஊரைச் சுற்றிய பகுதிகள் எல்லாம், சிதிலமடைந்து உருக்குலைந்து காணப்படுகிறது. புயல் வரும், என்று முன்னரே எச்சரிக்கை விடுக்கப் பட்டதால், இந்தப் பகுதியில் வசித்து வரும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

ஆனாலும், கஜா புயல், இந்தப் பகுதிகளை எல்லாம் புரட்டிப் போட்டு விட்டது. ஆனால், இதன் பாதிப்பை அறிய எந்த ஆட்சியாளரும் அக்கரை கொள்ளவில்லை, என்பது இப்பகுதி மக்களின் ஆதங்கமாக இருக்கிறது.

குறிப்பாக, பாமணி என்ற ஊரில், புயலின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. இதனை, உடனடியாக, ஆட்சியாளர்கள் பார்வையிட்டு, தங்களுக்கு, உதவ வேண்டும், என்று ஆட்சியாளர்களின் உதவிக்காக அவர்கள், காத்திருக்கிறார்கள்.