உச்சகட்ட மகிழ்ச்சியில் சிம்ரன், வாழ்த்து கூறிய திரிஷா.! ஏன் தெரியுமா?

தமிழசினிமாவில் ஒரு காலகட்டத்தில் அனைத்து நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக பட்டையை கிளப்பியவர் நடிகை சிம்ரன். இவர் நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே, ஏழுமலை,ம் பம்மல் கே.சம்பந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், ரமணா, வாரணம் ஆயிரம் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

பின்னால் 2003–ல் தீபக் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்தார்.மேலும் இவர்களுக்கு அதீப், அதித் என்று 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு என்ற மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிம்ரன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தின் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் சிம்ரன் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டிவந்த நிலையில் சிம்ரனும், ‘‘நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது உண்மையா என்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த போஸ்டரை பார்த்த நடிகை திரிஷா, ‘‘சிம்ரன் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார்’’ என்று டுவிட்டரில் பாராட்டி உள்ளார். இதுபோல் மேலும் பல நடிகர்கள் சிம்ரனை வாழ்த்தி உள்ளனர்.