சிறுநீரகத்தில் கல் இருக்கா? அப்போ இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்!

பொதுவாக உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பிரதான தொழிலை சிறுநீரகம் செய்கின்றது.

நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடலில் இரந்த வெளியேற்றப்படுகின்றது

சிறுநீரகங்கள் சரியாக இயங்காத பட்சத்தில், உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

சிறுநீரகக் கற்கள் என்றால் என்ன?
குறிப்பாக சிறுநீரகக் கற்கள் என்பது சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகளிலிருந்து உருவாகும் கடினமான படிவுகள் ஆகும்.

அவை அளவில் வேறுபடலாம் மற்றும் சிறுநீர் பாதை வழியாக செல்லும் போது கடுமையான வலியை ஏற்படுத்தும்.

சிறுநீரக கற்களின் பொதுவான வகைகள் கால்சியம் கற்கள், யூரிக் அமில கற்கள், ஸ்ட்ருவைட் கற்கள் மற்றும் சிஸ்டைன் கற்கள் என்பனவாகும்.

சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க, ஆக்சலேட்டுகள், சோடியம் மற்றும் விலங்கு புரதம் அதிகம் உள்ள உணவுகளை கட்டுப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் நீரேற்றமாக இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அந்தவகையில் சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

அதிக உப்பு நிறைந்த உணவுகள் : சிறுநீரகக் கல் சம்பந்தமான பிரச்சினை இருப்பவர்கள் அதிக உப்பு நிறைந்த உணவுகளை கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. அதுமட்டுன்றி அதிக மசாலாக்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதிக சோடியம் சிறுநீரக ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்வே, இவற்றைத் தவிர்ப்பது அவசியம்.

விட்டமின் சி நிறைந்த உணவுகள்: விட்டமின் சி நிறைந்த உணவுகள் சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கும் என்பதால், அவற்றை உணவில் இருந்து விலக்க வேண்டியது அவசியம். விட்டமின் சி சத்து சிறுநீரகக் கல் பாதிப்பை மேலும் அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சோயா: சோயாவில் உடலுக்குத் தேவையான புரதம் செரிவாக காணப்பட்டாலும், சில சோயா தயாரிப்புகளில் ஆக்சிலேட் அதிக அளவில் இருக்கும். இது சிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணமாகின்றது. சிறுநீரன பிரச்சினை இருப்பவர்கள் சோயா பொருட்களைத் தவிருப்பது முக்கியம்.

தானியங்கள்: சிறுநீரகக் கல் பாதிப்பு உள்ளவர்கள் முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சோளம், கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம் போன்ற தானியங்களில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருந்தாலும், செரிமான நேரம் அதிகம் எடுக்கும். இது சிறுநீரகத்துக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து அதன் பாதிப்பை மேலும் மோசமாகமாற்றும்.

அசைவம்: புரதச்சத்து நிறைந்த மீன், இறைச்சி மற்றும் முட்டைகளை எடுத்துக் கொள்வதால் சிறுநீரகக் கல்லின் பாதிப்பு மேலும் தீவிரமடையும். இது சிறுநீரக நோயாளிகளுக்கு எதிர்மறை விளைவை ஏற்படுத்தி பிரச்சனையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சிறுநீரக கல் இருப்பவர்கள் அசைவ உணவுகளை குறைத்துக்கொள்வது அல்லது தவிர்பது அவசியம்.