ஐந்தாம் தர புலமைப்பரிசில் தமிழ் மொழியில் 198 புள்ளிகளுடன் வரலாற்றுச் சாதனை…..!!

நடந்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகி   இருக்கும் நேரத்தில் எமது சேவைக்கு தொடர்பு கொண்ட இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அதிபர் தமக்கு கிடைத்த உத்தியோக பற்றற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான யாசின் டேவிட்சுஜீந்திரதாஸ் என்ற மாணவி 198 புள்ளிகள் பெற்று அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பெற்று சாதணை படைத்துள்ளதுடன் வவுனியாவிற்கும்,தன் பாடசாலைக்கும்,அதிபர் ஆசிரியர்கட்க்கும்,பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அகில இலங்கை ரீதியில் குறித்த மாணவியுடன் மேலும் இரண்டு தெற்கு சிங்கள மாணவர்களும் 198புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இதில் தமிழ் மொழி மூலம் 87,556 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 67,770 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.