ரஜினியின் 2.0 படத்தின் வீடியோ லீக்..!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி,எமி ஜாக்சன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘2.0’. இந்த படத்தை 400 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் செய்யப்படும் என காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு வெறும் ஏமாற்றம் தான் கிடைத்தது.

2.0′ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தினால் படம் வெளியாகுவதில் சிக்கல் நீடித்தது.

ஒரு வருடத்திற்கு மேலாக ரிலீஸ் தேதி தள்ளிப்போன 2.0 படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது

இந்நிலையில் இப்படத்தின் புதிய மேக்கிங் விடியோ வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.