ஈரான் நாடானது மதுவிலக்கு சட்டத்தை அமலில் வைத்திருக்கும் நாடாகும். இந்த நாட்டில் 1979 ம் வருடம் முதல் மதுவிலக்கு சட்டமானது அமல்படுத்தப்பட்டு, அதனை மீறுபவர்களை கசையடியும் அபராத தொகையும் விதித்து அந்த நாட்டு அரசாங்கம் மதுவிலக்கை அமலில் வைத்து உள்ளது.
இருந்தாலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையான மக்கள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் மதுவையும், தங்களது வீட்டிலேயே மதுபானங்களை தயாரித்து குடிப்பதும் அதனை விற்பதுமாய் உள்ளனர்.
இந்த நிலையில் ஈரான் நாட்டின் வடக்கு பகுதிகளில் உள்ள மாநிலங்களான ஹோர்மோஸ்கான், வடக்கு கோர்சன், அல்போர்ஸ், கோஹிலயா மற்றும் போயர் அஹ்மத் ஆகிய பகுதிகளில் மக்கள் சட்டத்திற்கு புறம்பான மதுபானங்களை வாங்கி குடித்துள்ளனர்.
அந்த மதுபானங்களை வாங்கி அருந்திய 400 நபர்களில் 27 நபர்கள் பரிதாபமாக பலியாகினர், மேலும் 300 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டனர்.
இந்த சப்பவும் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சட்டவிரோதமாக மதுபானங்களை தயார் செய்து விற்பனை செய்த 3 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.