மூன்றே நாட்களில் முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க வேண்டுமா? எளிய தீர்வு

இன்றைய அழகுபொருட்கள் அனைத்திலும் ரசாயனங்கள் அதிகம் கலந்து இருப்பதால் அதனை நாம் பயன்ம்படுத்துவதினால் நமது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

முகம் பொலிவோடு பிரகாசமாக இருக்க கிளின்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங் போன்றவற்றை தினமும் செய்து வர வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் மாசுக்கள் நீங்குவதுடன் எண்ணெய் வடிவதையும் கட்டுப்படுத்தும்.

இத்தகைய பல தோல் சம்பந்தப்பட்ட சிக்கல்களுக்கான இறுதி சிகிச்சைகள் நம் சமையலறையில் கிடைக்கும் எளிமையான பொருட்களிலிருந்து பெறப்படுகின்றன.

மேலும் சரும பிரச்சனைகளின் முக்கியமான முகத்தில் அதிகபடியான எண்ணெய் வழிவதை போக்க சில இயற்கை முறைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் பார்க்கலாம்.

முட்டை வெள்ளை மற்றும் ஓட்ஸ்மீல்
தேவையான பொருட்கள்
  • முட்டை- 1
  • ஓட்ஸ் மீல்- 2
செய்முறை
  • முட்டையின் வெள்ளை மற்றும் ஓட்ஸ்மீல் கலவை முகத்தில் இருந்து அதிக எண்ணெய் நீக்க பெரிதும் உதவுகின்றது.
  • முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளை பகுதியுடன், 2 டீஸ்பூன் ஓட்ஸ் மீல் சேர்த்து நன்கு மென்மையாக மாறிவிடும் வரை கலக்கவும்.
  • பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை குறைந்தது வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வழியும் அதிகபடியான எண்ணெய் பசை நீங்கும்.
பால் மற்றும் எலுமிச்சை
தேவையான பொருட்கள்
  • எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
  • பால்- தேவையான அளவு
செய்முறை
  • எலுமிச்சை சருமத்தின் எண்ணெயை குறைப்பதில் உதவுகிறது, அதேசமயம் பால் ஈரப்பதமாக வைக்கிறது.
  • தேவையான அளவு பாலுடன் ஒரு எலுமிச்சையை வெட்டி அதிலிருந்து ஒரு சில சொட்டை பாலில் விட்டு பின்பு அதனை நன்கு கலக்கி அதனை முகத்தில் தடவி பின் 5-10 நிமிடங்களுக்கு கழித்து பின்னர் சாதாரண தண்ணீரில் கழிவினால் நல்ல தீர்வு கிடைக்கும்.