டிவிட்டரில் ரசிகர்களை கவர்ந்த டிடி

தற்போது பிரபலங்களுக்கும் சினிமா நடிகர்,  நடிகைகளுக்கு இணையாக பிரபலமாக  மாறிவிட்டார்  டிடி என அனைவராலும் செல்லாமாக அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி.

முக்கிய சானலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் சிறப்பு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வருகிறார்.  சில படங்களிலும் நடித்துள்ளார்.

அவரின் நிகழ்ச்சிகளை பிரபலங்களும் பார்த்து வருகின்றனர். தற்போது எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்.  இதில் அவர் செம ஆட்டம் போடுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் டிடி தற்போது அழகான தோற்றத்தில் தன் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.  இதை ரசிகர்கள் விரும்பி லைக் செய்துள்ளார்கள்.