கிம் ஜாங் உன்னை சந்திக்கும் முன் டிரம்ப் சொன்ன அதிர்ச்சி தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் இன்று காலை சிங்கப்பூரின் சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஹோட்டலில் காலை 9 மணிக்கு ஒருவரை ஒருவர் சந்தித்து கை குலுக்கிக் கொண்டனர்.

வடகொரியா உருவான பின்பு அமெரிக்கா- வடகொரியா தலைவர்கள் சந்தித்து கொள்வது இதுவே முதல் முறை என்பதால், இது ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இருவரும் ஆலோசனை நடத்துவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிரம்ப் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன், எங்கள் இருவரின் சந்திப்பும் நல்லபடியாக செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது, நிச்சயமாக வெற்றிகரமாக முடியும் என்று கூறினார்.

இதே போன்று கிம் ஜாங் உன்னும் சந்திப்பு நல்ல படியாக முடியும் என்று புன்னகையோடு கூறினார்.

இப்படி ஒரு அற்புதமான சந்திப்புக்கு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் டிரம்ப் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பொருளாதார ஆலோசகரான Larry Kudlow-வுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் Walter Reed Medical Center-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.

சந்திப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இப்படி ஒரு தகவல் அதிர்ச்சி அளித்தது.