உங்கள் இதயத்தின் வயது தெரியுமா?

பிரிட்டனின் இதய அறக்கட்டளையுடன் இணைந்து பர்மிங்ஹாம் இதய ஆய்வு நிறுவனம் அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வை நடத்தியது.

அதுமட்டுமல்லாது, அமெரிக்காவின் நோய் தடுப்பு அமைப்பும் இதயம் குறித்த ஆய்வில் இறங்கியது. அப்போது, அந்நாட்டில் நான்கில் மூன்று பேருக்கு உண்மை வயதைக் காட்டிலும், அவர்களது இதயத்துக்கு சுமார் ஐந்து வயது அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதயத்தின் வயதை அதிகரிப்பது புகைப்பிடித்தல், ரத்த அழுத்த அளவீடு மற்றும் உடல் எடை போன்றவையே.

அமெரிக்காவின் தென்பகுதியில் இருக்கும் மிசி சிப்பி, மேற்கு விர்ஜீனியா, லூசியானா, கென்டக்கி மற்றும் அலபாமா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களது வயதைக் காட்டிலும் இதயத்தியற்கு அதிக வயதாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு நேர்மறையாக உட்டா, கோலராடோ, கலிபோர்னியா, மாஸாச்சூசெட்ஸ் மற்றும் ஹவாய் பகுதிகளில் இதயத்தின் வயது அவர்களின் வயதைவிட குறைவாகவே உள்ளது.

அதிலும் குறிப்பாக கருப்பின ஆண் மற்றும் பெண்களுக்கு இதயத்தின் வயது மிகமிக அதிகமாக உள்ளது. கருப்பின பெண்களுக்கு சராசரியாக ஐந்து முதல் ஏழு வயது அதிகமானதாகவும், அதேபோல, கருப்பின ஆண்களுக்கு சராசரியாக மூன்று முதல் நான்கு வயது அதிகமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிரிட்டனில் ஒவ்வொரு ஏழு வினாடிக்கும் ஒருவர் இதய குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளால் உயிரிழக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளத்