சி.வி.விக்னேஸ்வரன் கருத்துக்கள் கருத்துக்களே அல்ல!! ஏற்கும் கட்சி சார்ந்தவர்களையே தெரிவுசெய்ய வேண்டும் ”

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டார்.

rr-2-7-678x381அவர் தனி நபராக போட்டியிட்டிருக்கவில்லை. எனவே மக்கள் தாம் ஏற்கும் கட்சி சார்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும். தனிநபர்களை அல்ல. என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பாராமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது,  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மக்கள் கட்சிகளை பார்க்காமல் தமக்கு சிறந்த சேவையாற்றக் கூடிய தனிநபர்களை தேர்வு செய்யவேண்டும் என கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் அவர் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலை சாதாரணமாக பார்க்க இயலாது மக்கள் தொடர்சியாக தேர்தல்களில் வழங்கிவரும் ஆணையை வலுப்படுத்தும் தேர்தலாக இந்த தேர்தல் அமையும்.

இதில் கட்சிகளை பார்க்காமல் ஆட்களை பார்த்து வாக்களியுங்கள் என கூறப்படும் கருத்துக்கள் கருத்துக்களே அல்ல.

மக்கள் கட்சிகள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே ஆட்களுக்கு வாக்களிக்கிறார்கள். குறிப்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாக தேர்தலில் போட் டியிட்டார்.

தனிநபராக தேர்தலில் போட்டியிடவில்லை. மாகாண சபையை மத்திய அரசாங்கம் சுயமாக இயக்க அனுமதிக்கவில்லை. என கடந்த சில தினங்களுக்கு முன்னரும் கூட முதலமைச்சர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் ஊடாக பார்த்தேன்.

அவ்வாறிருக்கையில் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் குட்டி அரசாங்கமான உள்ளூராட்சி சபைகளில் தனி நபர்கள் மக்களுக்கு என்ன சேவையை செய்ய முடியும்.

ஒரு தனிநபர் ஒரு வீதியை போட இயலுமா? தண்ணீரை பெற்று கொடுக்க இயலுமா? எனவே இவ்வாறான கருத்துக்களில் மக்கள் கருத்தூன்றக் கூடாது.

மக்கள் தாம் ஏற்றுகொள்ளும் கட்சிகளுக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் எனக் கூறினார்.

மேலும் யாழ்.மாநகரசபை மேயர் வேட்பாளர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கேட்டபோது,

கட்சிரீதியாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக நான் அறியவில்லை. இதற்கிடையில சொலமன் சிறில்,பத்திரிகையாளர் வித்தியாதரன், மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ஆனோல்ட், ஜெயசேகரம் போன்றவர்களின் பெயர்கள் பேசப்படுகின்றது.

இவர்களில் யாரை மேயர் வேட்பாளராக போடுவது என்பது தொடர்பான உத்தியோகபூர்வ முடிவு இல்லை.

வேட்பாளராக போட்டாலும் வேறு வேலைகள் இல்லாமல் 100 வீதம் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய இனத்தின் விடியலை நோக்கி உளமார நகர கூடிய ஒருவரை மக்கள் தேர்வு செய்யவேண்டும்.

அதனோடு யாழ்.மாநகரம் என்பது தமிழர்களின் அடையாளம். வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்கள் யாழ்.மாநகரை பார்கின்றபோது அவர்கள் யாழ்.மாவட்டத்தின் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட அடையாளங்களை காண்கி றார்கள். அதனை பாதுகாக்கும் தன்மை கொண்டவரை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.