இழுத்து கொண்டிருந்த உயிர், தங்கையிடம் கூறிய உண்மை..!

2005ம் ஆண்டு குஜராத்தில் சோக்ராபுதீன் ஷேக் கொலை செய்யப்பட்ட கேஸில் 2010ம் ஆண்டு அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் இருந்து அமித்ஷா 2014ம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

2014ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி நள்ளிரவு சமயத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் மர்மமான முறையில் இறந்தார்.அவர் மரணத்தின் போது சோக்ராபுதீன் வழக்கை அவர் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கில் பாஜக தேசிய தலைவராக அமித்ஷா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நீதிபதி மரணத்திற்கு மாரடைப்பு தான் காரணம் என்று மீடியாக்களில் செய்தி வெளியாயின. ஆனால், அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்த நிலை உள்ளிட்ட பல்வேறு தருணங்கள் சந்தேகத்தை வலுவடைய செய்துள்ளது.

நவம்பரில் சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்த பிரிஜ் கோபால் ஹர்கிஷன் லோயா மரணமடைந்த விவகாரத்தில் மர்மங்கள் உள்ளன என்று பல்வேறு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ள செய்திகள் மிகவும் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.

நீதிபதி லோயாவின் குடும்பத்தினர் மேற்கண்ட விசாரணையின்போது அவருக்கு மிரட்டல்கள் வந்ததாகவும் லஞ்சம் கொடுப்பதாக பேரம் பேசப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பியுள்ளனர்.

 

விசாரணையின் போது, நீதிபதியின் சகோதரியான அனுராதா பியானி. (இவர் மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியை சேர்ந்த மருத்துவர்). இவர் கூறிய தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

அவர் கூறுகையில், மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பிற்காலத்தில் நியமனம் செய்யப்பட்ட மோகித் ஷா இந்த வழக்கில் ஆதரவான தீர்ப்பு வழங்க ரூ.100 கோடி லஞ்சம் வழங்க பேரம் பேசியதாக லோயா தெரிவித்தார் என்று அனுராதா தெரிவித்தார்.

இந்த தகவலை இவரது சகோதரர் இறப்பதற்கு சில வாரங்கள் முன்பு தன்னிடம் தெரிவித்ததாக அனுதராதா கூறினார்.