ஐ.ஏ.எஸ். அதிகாரியை மிரட்டி பணம் பறித்த தம்பதி கைது!

இந்தியாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியை மிரட்டி பணம் பறித்த தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தின் மாநில போக்குவரத்து துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் ராதேஷ்யாம் மோபல்வார். இவர் மீது ஊழல் புகார் எழுந்ததால், கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட இவரை, துப்பறிவு நிறுவனம் நடத்தி வரும் சதீஷ் மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஆகியோர் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர்.

அப்போது அவர் ஊழல் தொடர்பான ஆதரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் 7 கோடி ரூபாய் பணம் கொடுக்கும் படி மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி அப்படி கொடுக்க தவறினால், உனது மகனை கடத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

ஆனால் ராதேஷ்யாம் உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின் பொலிசார் கொடுத்த அறிவுரையின் பேரில், தனது நண்பரிடம் 1 கோடி ரூபாய் பணம் கொடுத்து அனுப்புவதாக அவர் கூறியுள்ளார்.

அந்த தம்பதியிடம் ராதேஷ்யாம்மின் நண்பர் பணத்தை கொடுத்த பின்பு, அங்கு மறைந்திருந்த பொலிசார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் மொபைல் போன்கள், லேப்டாப், சிடிக்கள் மற்றும் பென் டிரைவ்களை போன்றவைகளை பறிமுதல் செய்த பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.625.0.560.350.160.300.053.800.668.160.90 (12)