4வயது சிறுவன் ஒருவன் மூச்சுக்குழாயில் பொம்மை சிக்கியதில் உயிரிழந்துள்ளார்.

மும்பை காந்திவிலி குரார் பகுதியை சேர்ந்தவர் 4வயது சிறுவன் ஒருவன் மூச்சுக்குழாயில் பொம்மை சிக்கியதில் உயிரிழந்துள்ளார்.

59d337b966db6-IBCTAMILகுறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

நவராத்திரி விழாவை கண்டு களித்த குறித்த சிறுவனின் குடும்பத்தினார்  வீடு திரும்பும்போது  வரும் வழியில் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கி கொடுத்தனர்.

எனினும் அந்த சிப்ஸ் பாக்கெட்டிற்குள் சிறிய பொம்மை ஒன்று இருந்துள்ளது.

வீட்டிற்கு வந்தவுடன் சிறுவன் அந்த பொம்மையை வைத்து விளையாடி கொண்டு இருந்தான்.

அப்போது அவன் திடீரென கையில் வைத்திருந்த பொம்மை வாயில்போட்டு விழுங்கி விட்டான்.

எனவே அவனால் பேச முடியவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொம்மையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

எனவே  குறித்த சிறுவனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.

ஆனால் நவராத்திரி கொண்டாட்டத்தால் அந்த பகுதி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.எனவே அவர்களுக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே சிறுவனை தூக்கி கொண்டு 3 கி.மீ. தூரம் நடந்து அந்த பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு சிறுவனை பரிசோதித்த டொக்டர்கள் அவனது மூச்சுக்குழாயில் பொம்மை சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.

எனவே அவர்கள் உடனடியாக சிறுவனை காந்திவிலி, சதாப்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறித்தனர்.

இதையடுத்து சிறுவனை சதாப்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

சிறுவனின் மூச்சு குழாயில் பொம்மை சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவன் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுபோன்று மூச்சு குழாயில் முற்றிலும் அடைப்பு ஏற்படும் போது 5 முதல் 10 நிமிடங்களுக்குள் மருத்துவ சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என டாக்டர் ஒருவர் கூறினார்.

பொம்மை மூச்சுக்குழாயில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் காந்திவிலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.