யாழில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட தீசன் அமிர்தலிங்கம் மெர்சல் திரைப்படத்துக்கான டிக்கெட் விற்பனையில்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவர இருக்கும் மெர்சல் திரைப்படத்துக்கான டிக்கெட் விற்பனை தொடர்பில் பாரிய பண மோசடி இடம்பெற்றுவருவதாக அறியப்பட்டுள்ளது.

Merasal-720x450

படத்துக்கான சிறப்பு காட்சிகள் காண்பிப்பதற்காக மாநகரசபை அனுமதி பெறப்படுதல் அவசியம் எனவும் மெர்சல் படத்துக்கான சிறப்பு காட்சிகளுக்கு மாநகரசபை அனுமதி வழங்கப்படவில்லை எனவும் மாநகரசபை ஆணையாளர் திரு வாகீசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப் படத்திற்கான போலி டிக்கெட்கள் ஒரு நிறுவனம் மூலம், தீசன் அமிர்தலிங்கம் என்பவரினால் ஏமாற்றி விற்கப்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது.

இவ் டிக்கெட்கள் சுமார் 1000 ரூபாவில் இருந்து 3000 வரை விற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களை கேட்டபொழுது படத்திற்கான banner, poster ஓட்டுதல் திரைப்பட ஒழுங்குகள் செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் யாழ் விஜய் ரசிகர் மன்ற அங்கத்தவர்களுக்கு குறைந்த அளவு டிக்கெட்கள் மட்டும் வழங்கப்படுவது வழமை எனவும், இது தவிர வேறெந்த சிறப்பு காட்சி டிக்கெட்டுக்களோ, முற்பதிவு டிக்கெட்டுக்களோ யாழின் எந்த ஒரு திரையரங்குகள் சார்பிலும் விற்பனை செய்யப்படவில்லை எனவும் யாரும் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கூறினார்.

2016 ம் ஆண்டு மாவீரர் தினத்தில் கோலிப்பண்டிகை நடாத்த முயன்று மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு, யாழில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட தீசன் அமிர்தலிங்கம் என்பவரே இம் மோசடிக்கு காரணகர்த்தா என்பது கண்டறியப்பட்டுள்ளது.