பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அவர் இரு வாரங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த குடியிருப்பின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனையின் பின் இறப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரின் திடீர் மரணத்தால் பாகிஸ்தான் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.