ஓவியாவை ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.

ஓவியாவுடன் சேர்ந்து படத்தில் நடிப்பேன் என்று ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவ் அவரின் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (7)

ஓவியா ஆர்மிக்காரர்களுக்கு ஆரவ் எதிரியானார். இந்நிலையில் ஆரவ் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார். ஓவியாவுடன் சேர்ந்து படத்தில் நடிப்பீர்களா என்று ஆரவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ரசிகர்களின் விருப்பம் அதுவாக இருந்தால் நிச்சயம் ஓவியாவுடன் சேர்ந்து நடிப்பேன் என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியால் பிரபலமான ஆரவை ஹீரோவாக பார்க்க அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஓவியா, ஆரவ் ஜோடியாக நடிக்கும் படம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.