குளவிகள் மூர்க்கத்தனமாக கொட்டியதினால் மக்கள் பாதிப்பு.

மத்தியமாகாணம் நுவரெலியா கொட்டகலையில் குளவிகள் மூர்க்கத்தனமாக கொட்டியதினால் 16 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil-Daily-News-Paper_84793817997

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

கொட்டகலை லொக்கீல் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களையும், அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் பெரியோர்களையும் குளவி கொட்டியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 5 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 11 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆண்களும், 6 பெண்களும், 4 சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.