தனது திருமணம் குறித்து கோபப்பட்டு பேசிய கீர்த்திசுரேஷ்

கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து இருக்கிறார். அதன் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது.

அந்த விழாவுக்கு கீர்த்தி தாமதமாக வந்து இருந்தார். மும்பையில் ஒரு விளம்பர படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு மாலை தான் சென்னைக்கு திரும்பியதாக கூறி இருக்கிறார்.

கேள்வியால் கோபம்
கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது என பரவி வரும் தகவலை பற்றி பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டனர்.

“அதற்கு கோபப்பட்டு பதில் சொன்ன அவர் “ஏங்க.. என்னை கல்யாணம் பண்ணி குடுக்குறதுலயே இருங்கீங்க.. நடக்குறப்ப நானே சொல்றேன்” என கூறி இருக்கிறார்.

இயக்குனர் வெற்றிமாறன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன்.

இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.

சமீபத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாம்.

இந்நிலையில் விடுதலை படத்திற்காக வெற்றிமாறன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதில் இவர் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூபாய் 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ட்ரெண்டியான உடையில் நடிகை ரைசா வில்சன் லேட்டஸ்ட் போட்டோஷூட்

சீரியல் நடிகை வாணி போஜனின் முக அழகிற்கு என்ன காரணம் தெரியுமா?

வாணி போஜன்
சின்னத்திரையில் ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு என சீரியல்கள் நடித்தவர் வாணி போஜன். சீரியல்கள் மூலம் அவர் ரசிகர்களால் கொண்டாடப்பட சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டார்.

இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள வாணி போஜன் வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மாலத்தீவில் அவர் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

பியூட்டி டிப்ஸ்
தினமும் இளநீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளாராம், கோதுமை, மைதா, சர்க்கரை போன்ற பொருள்களை சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறார்.

முகம் இளமையாக தெரிய யோகா தினமும் செய்து வருகிறார், முகம் வெள்ளையாக குடிக்கும் ஜுஸ்களில் சர்க்கரை இல்லாமல் குடிப்பாராம். பகலை காட்டிலும் இரவில் கட்டாயம் ஸ்கின் கேர் செய்யாமல் தூங்க மாட்டாராம்.

40 வயது நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் சமந்தா

நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு சினிமாவில் தான் பாப்புலராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஹாலிவுட் அளவிற்கு செல்லும் வாய்ப்பு அவருக்கு வந்திருக்கிறது. Citadel என்ற வெப் சீரிஸில் அவர் தற்போது நடித்து வருகிறார்.

அந்தத் தொடரில் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் வருண் தவான் உள்ளிட்ட பலரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அம்மா ரோலில் சமந்தா
Citadel வெப் சீரிஸில் சமந்தாவின் ரோல் என்ன என்பது தற்போது வரை வெளியிடப்படாமல் இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த சில புகைப்படங்கள் மட்டுமே இதுவரை வெளியாகி வைரலாகி இருக்கின்றன. அதனால் அவரது ரோல் என்ன என்பது பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது சமந்தா பிரியங்கா சோப்ராவின் அம்மாவாக நடிக்கிறார் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. வருண் தான் அப்பா ரோலில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

80கள் அல்லது 90களில் நடைபெறும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் சமந்தா மற்றும் வருண்தவான் வருவார்கள் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

நடிகர் மாதவன் குறித்து சில தகவல்கள்

நடிகர் மாதவன்
பிரபலங்களின் பிறந்தநாள் வரும் போது அவர்களை பற்றிய நமக்கு தெரிந்திராத விஷயங்கள், சொத்து மதிப்பு போன்ற விவரங்கள் கடந்த சில வருடங்களாக அதிகம் வெளியாகி வருகிறது.

அப்படி இன்று ஜுன் 1, தனது 53வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் மாதவன் குறித்த சில தகவல்களை காண்போம்.

பாலிவுட்டில் சீரியல்களில் நடித்துவந்த மாதவனுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது தான் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படம்.

அப்படத்தின் மூலம் தமிழக மக்களால் சாக்லெட் பாயாக கொண்டாடப்பட்ட மாதவன் கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஜேஜே, ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்து வெற்றிகளை கண்டார்.

சொத்து மதிப்பு
25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகராக வலம் வரும் மாதவனின் சொத்து மதிப்பு ரூ. 105 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

மும்பையில் ஆடம்பர பங்களா, சென்னையில் ரூ. 18 கோடி மதிப்பில் ஒரு வீடு இருக்கிறது.

ஒரு படத்துக்கு ரூ. 6 முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் பெறும் மாதவன் விளம்பரங்கள் மூலமாகவே ரூ. 1 கோடி வரை வருவாய் பெறுகிறாராம்.

வீரன் திரைவிமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வீரன். பொதுவாக ஹாலிவுட் சினிமாவில் தான் சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும்.

அவென்ஜர்ஸ், ஜஸ்டிஸ் லீக், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த கான்சப்ட் தான் சூப்பர் ஹீரோ கதைக்களம். அந்த சூப்பர் ஹீரோ கான்செப்ட்டில் தமிழில் எடுக்கப்பட்டு இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் வீரன். இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

மேலும் மரகத நாணயம் போல் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இந்த கதைக்களத்தை எப்படி கையாண்டு இருப்பார் என்றும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர். இதற்கும் மேல் ஹிப் ஹாப் ஆதியை சூப்பர் ஹீரோவாக திரையில் காண அவருடைய ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

இப்படி வரிசையாக பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள வீரன் திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..

கதைக்களம்
வீரனூரில் வாழ்ந்து வரும் கதாநாயகன் குமரன் {ஹிப் ஹாப் ஆதி} தனது சிறு வயதில் மின்னலால் திடீரென தாக்கப்பட்டு சுய நினைவை இழக்கிறார். உடனடியாக ஆதியை மருத்துவமனையில் அனுமதிக்கினர். மருத்துவர்களின் சிகிச்சையில் இருக்கும் ஆதி எப்போது வேண்டுமானாலும் சுய நினைவுக்கு வரலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார்.

இதனால், வீரனூரில் இருந்து தனது தம்பியை சிங்கப்பூருக்கு ஆதியின் அக்கா அழைத்து சென்று விடுகிறார். சிங்கப்பூருக்கு செல்லும் ஆதிக்கு சில நாட்கள் கழித்து நினைவு திரும்புகிறது. நாட்கள் செல்ல செல்ல தனக்குள் மின்னல் சக்தி இருப்பதை ஆதி உணருகிறார்.

அதுமட்டுமின்றி தன்னால் வேறொருவரின் மூளையை கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்கிறார். சிங்கப்பூரில் இருந்து 14 வருடங்கள் கழித்து மீண்டும் வீரனூருக்கு வரும் ஆதி தனது சிறு வயது நண்பர்களை சந்தித்து ஆடி பாடி மகிழ்ச்சியாக இருக்கிறார்.

இந்த சமயத்தில் என்ட்ரி கொடுக்கிறார் வில்லன் வினய். தனது ரூ. 2000 கோடி மதிப்புள்ள மிகவும் ஆபத்தான திட்டத்தை வீரனூரில் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறார். இந்த திட்டத்தினால் ஏராளமான மக்கள் உயிர் பலியாகும் என ஆதிக்கு தெரியவருகிறது. இதன்பின் ஆதி என்ன செய்தார்? வில்லன் வினய்யை சூப்பர் ஹீரோவாக மாறி எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்
ஹீரோ ஹிப் ஹாப் ஆதி வீரன் படத்தின் மூலம் மீண்டும் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார். குமரனாக வரும் போதும் சரி வீரனாக வரும் போதும் சரி பட்டையை கிளப்பி விட்டார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டி விட்டார் என்றும் தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஸ்கோர் செய்துள்ளார். கடந்த சில படங்களாக தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஆதி, இந்த படத்தில் முழுமையாக பூர்த்தி செய்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

கதாநாயகி வரும் ஆதிரா மற்றும் ஆதியின் நண்பனாக வரும் சசி இருவரின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. முனீஸ்காந்த் – காளி வெங்கட் காம்போ அல்டிமேட். இவர்கள் இருவரும் வரும் அனைத்து காட்சிகளிலும் திரையரங்கம் முழுவதும் சிரிப்பு சத்தம் மட்டுமே நிரம்பி இருக்கிறது. வில்லனாக வரும் வினய்க்கு மிகவும் குறுகிய காட்சிகள் மட்டும் தான். அவருக்கு படத்தில் பெரிதும் ஸ்கோப் இல்லை.

ஆனால், இரண்டாவது வில்லனாக வந்த நடிகர் பத்ரி பட்டையை கிளப்பி விட்டார். நடிகர் செல்லா, போஸ் வெங்கட், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரின் நடிப்பு கச்சிதமாக இருந்தது. ஊரில் உள்ள யாரும் வீரன் சாமியை நம்பாத போது, வீரனை மட்டும் நம்பும் முதியவரின் நடிப்பு அனைவரையும் மிஞ்சிவிட்டது.

இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் எடுத்துக்கொண்ட கதைக்களம் படத்தின் பிளஸ் பாயிண்ட். ஊர் எல்லையில் நின்று ஊரை காக்கும் எல்லை சாமி சூப்பர் ஹீரோவாக வந்தால் எப்படி இருக்கும் என்ற கான்சப்ட் நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. திரைக்கதையில் தொய்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதற்கு முக்கிய காரணம் நகைச்சுவையாக இருந்தது. அதை சரியாக செய்த இயக்குனருக்கு பாராட்டு.

நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக எடுத்து காட்டியுள்ளார். குறை என்று பார்த்தால் மெயின் வில்லன் வினய்க்கு இன்னும் கூட ஸ்கோப் கொடுத்து இருக்கலாம். மற்றபடி இயக்கம், திரைக்கதை, வசனம் அனைத்தும் பக்கா.

ஆடை வடிவமைப்பு ஆதியின் வீரன் லுக்கை வேற லெவலுக்கு எடுத்து சென்று விட்டது. தீபக் டி. மேனனின் ஒளிப்பதிவு மிரட்டலாக இருந்தது. குறிப்பாக சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவு மிரட்டலாக இருந்தது. எடிட்டிங் பக்கா. பாடல்கள் மனதில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசை செம மாஸ்.

பிளஸ் பாயிண்ட்

ஆதி நடிப்பு

முனீஸ்காந்த் – காளி வெங்கட் நகைச்சுவை காட்சிகள்

இரண்டாவது வில்லன் பத்ரி

இயக்கம், திரைக்கதை

வீரனை மட்டுமே நம்பி வாழ்ந்த முதியவரின் கதாபாத்திரம்

ஒளிப்பதிவு

மைனஸ் பாயிண்ட்

வில்லன் என எதிர்பார்க்கப்பட்ட வினய்க்கு சுத்தமாக படத்தில் ஸ்கோப் இல்லை

மொத்தத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ கான்செப்ட் கொண்ட திரைப்படங்கள் வெற்றியடையவில்லை. ஆனால், வீரன் இந்த வரிசையில் இடம் பெறவில்லை..

விஜயுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!

தளபதி 68
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் “தளபதி 68” படத்தை பற்றிய தகவல் அதிகாரபூர்வமான தகவல் வெளிவந்தது.

ஆனால் அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த “கஸ்டடி” படம் பல விமர்சனங்களுக்கு உட்பட்டு எதிர்பார்த்த வெற்றி தரவில்லை. இருப்பினும், விஜய் “தளபதி 68” படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவை தேர்வு செய்துள்ளார்.

விஜய்க்கு ஜோடி இவரா
இந்த படத்தை பற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் என பல சந்தேகங்கள் எழுந்தது.

அப்போது நடிகை திரிஷா தான் விஜய்க்கு ஜோடியாக போகிறார் என சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க போவதாக தகவல் வந்துள்ளது. இருப்பினும் படத்தின் கதாநாயகி பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை.

பல கோடி ரூபா பெறுமதியிலான வீட்டை விற்று குழந்தைகளுடன் நடுத்தெருவிற்கு வந்த பிரபல நடிகை!

சாந்தி வில்லியம்ஸ்
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை நடிகைகளுக்கு தான் இப்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது.

எனவே பல கலைஞர்கள் முதலில் தங்களது பயணத்தை சீரியல் பக்கமே முதலில் தொடங்க விரும்புகிறார்கள். நாயகிகளை தாண்டி வில்லி ரோலில் நடிப்பவர்களுக்கும் மக்களிடம் நல்ல ரீச் கிடைக்கிறது.

அப்படி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பார்வதி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் சாந்தி வில்லியம்ஸ்.

12 வயதில் நடிக்க தொடங்கிய இவர் 1999ம் ஆண்டில் இருந்து சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை, பூவே உனக்காக, பாண்டியன் ஸ்டோர்ஸ் என கலக்கி வருகிறார்.

குடும்பம்
1979ம் ஆண்டு மலையாள கேமராமேன் ஜெ வில்லியம்ஸை திருமணம் செய்த இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். சாந்தி வில்லியம்ஸ் ஒரு பேட்டியில், எனது கணவருக்கு கார்கள் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும், குழந்தைகளாகவே பார்ப்பார்.

ஏகப்பட்ட கார்கள் இருந்தது, இவர் எங்கு போக வேண்டும் என சொல்கிறாரோ அந்த திசையில் இருக்கும் காரை எடுத்து டிரைவர் காத்திருப்பார். 1996 க்கு முன்பு படங்களை எடுத்து நஷ்டமாகிவிட்டது.

இதனால் கே.கே.நகரில் எனது சொந்த வீட்டை இழந்து குழந்தைகளுடன் நானும் அவரும் நடுரோட்டில் நின்றோம். அன்று நாங்கள் இழந்த வீட்டின் இன்றைய மதிப்பு ரூ 100 கோடி.

பழைய நிலைமையை அடைய கடுமையாக கஷ்டப்பட்டு உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சிம்பு மீது புகார் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்

சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் தொடங்காத நிலையில் தற்போது ஒரு சிக்கல் வந்திருக்கிறது.

புகார் கொடுத்த தயாரிப்பாளர்
சிம்பு பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு தொடர்ந்து மூன்று படங்கள் நடித்து கொடுக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம். ஆனால் தற்போது திடீரென கமல் தயாரிப்பில் படம் நடிக்க சென்றுவிட்டார் என ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறாராம்.

இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிம்பு இப்படி பஞ்சாயத்தில் சிக்குவதும் இது முதல் முறை அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் அவர் இதை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

நடிகை சாய்பல்லவியின் நீளமான கூந்தலுக்கு என்ன காரணம் தெரியுமா?

சாய் பல்லவி
தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்றதன் மூலம் சினிமாவில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் நடிகை சாய் பல்லவி.

நடிப்பு மட்டும் இல்லாமல் அட்டகாசமான நடனத்தின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.

முகத்தில் பருக்கள் இருந்தாலும் மேக்கப் என செயற்கை பொருள்கள் இல்லாமல் இயற்கையாக தனது அழகை பாதுகாத்து வருகிறார். சாய் பல்லவியிடன் நீளமான முடிவுக்கு இளம் ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம்.

இவ்வளவு அழகான நீளமான முடிக்கு காரணம் ஒரு விஷயம் உள்ளது.

பயன்படுத்தும் பொருள்
சாய் பல்லவி எப்போதும் செயற்கை அழகு பொருட்களை பயன்படுத்துவதே இல்லையாம்.

சருமத்தைப் பராமரிக்க சாய் பல்லவி உணவில் கவனம் செலுத்துகிறார். காய்கறிகள் பழங்களை எப்போதும் உணவில் சேர்த்து கொள்வாராம்.

ஆரோக்கியமான உணவு முறை பொலிவான சருமத்தை தரும் என்கிறார். தனது கூந்தலை பராமரிக்க சாய் பல்லவி கற்றாழையை தான் பயன்படுத்துகிறாராம்.

வெளிநாட்டில் கிளாமர் லுக்கில் அசத்தும் சாந்தனு கீர்த்தி

சாந்தனு
நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சக்கரகட்டி, சித்து +2 போன்ற படங்கள் மூலமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்த சாந்தனு தற்போதும் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் ராவணகோட்டம் படம் ரிலீஸ் ஆகி இருந்தது. சாந்தனுவின் மனைவி கீர்த்தியும் பிரபல தொகுப்பாளர் தான்.

கிகி கிளாமர் போட்டோ
தற்போது கீர்த்தி வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் அங்கு எடுத்த கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதோ..

விஜய் டீவியில் முடிவுக்கு வரப்போகும் நிகழ்ச்சிகள்

விஜய் டிவி
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்ட ரசிகர்களும் ஆசைப்படுவார்கள்.

கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் எல்லாம் பொது மக்களுக்கு ஒரு அருமையான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

தற்போது விஜய் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 4 நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து முடிவுக்கு வரப்போகிறதாம்.

அது என்னென்ன நிகழ்ச்சிகள் என்றால் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் மற்றும் கலக்கப்போவது யாரு.

இந்த நிகழ்ச்சிகள் முடிவடைய Ready Steady Po போன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் வரப்போகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Star Telly Tamil (@startellytamil)

ரசிகர்களால் கோபமடைந்த ஆர்யா

ஆர்யா
நடிகர் ஆர்யா தற்போது காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் நடித்து இருக்கிறார். அதன் ப்ரோமோஷனுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் ஆர்யா கலந்து கொண்டு வருகிறார். அவருடன் நடிகை சித்தி இத்னானியும் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சேலம் பகுதியில் இருக்கும் மால் ஒன்றில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. ஆர்யாவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி இருந்தனர்.

வெளியேறிய ஆர்யா
நிகழ்ச்சியில் ஆர்யா பேசிக்கொண்டிருந்த நிலையில் அதிகம் பேர் அவருதான் செல்பி எடுக்க முற்பட்டனர். அதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது.

பாதுகாக்பை மீறி பலரும் மேடையில் ஏறியதால் கோபமடைந்த ஆர்யா அங்கிருந்து வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு ஆர்யா மீண்டும் வருவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.

பிரம்மாண்ட படத்தில் வில்லனாக நடிக்கும் கமல்

Project K
நடிகர் பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.

நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் ஹாலிவுட் தரத்திற்கு மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சம்பளம்
Project K படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம்.

அவர் வெறும் 20 நாள் மட்டுமே ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வந்திருக்கிறது. கமல்ஹாசனை முழுக்க முழுக்க வில்லனாக பார்க்கலாம் என்பதால் தற்போது ரசிகர்கள் இந்த தகவலால் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

மீண்டும் தொகுப்பாளினியாகும் டிடி

தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. இளம் வயதில் தொகுப்பாளினியாக ஆரம்பித்த அவரது பயணம் இப்போது வரை வெற்றிகரமாக இருந்து வருகிறது.

விஜய்யில் ஏகப்பட்ட ஹிட் ஷோக்கள், பிரபலங்களின் Concert, தனியார் நிகழ்ச்சிகள், இசை, டிரைலர் வெளியீடு என தொடர்ந்து தனது தொகுப்பாளினி வேலையை செய்துகொண்டு இருக்கிறார்.

அண்மையில் காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அதிக நிகழ்ச்சிகளில் வராமல் இருந்த டிடி இப்போது மீண்டும் கலக்கி வருகிறார்.

DDStyles மூலம் தனியாகவும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

புதிய ஷோ
தற்போது தொகுப்பாளினி டிடி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.

அதாவது அவர் மீண்டும் விஜய் டிவியில் ஒரு சூப்பரான ஷோ தொகுத்து வழங்க இருக்கிறாராம். அது வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை, அவர் இதற்கு முன் நடத்திய என்கிட்ட மோதாதே நிகழ்ச்சி தானாம்.

ஆனால் நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாக போகிறது, எப்படி இருக்கப்போகிறது என்பது எல்லாம் தெரியவில்லை.

திடீரென நடிகர் ரஜினியை இலங்கை தூதுவர்

நடிகர் ரஜினிகாந்த்
இந்திய சினிமாவிற்கே முக்கிய நடிகராக இருக்கிறார் ரஜினிகாந்த். தமிழில் எடுக்கப்படும் அவரது படங்களை இந்திய சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடுவார்கள்.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து இடையில் படங்கள் நடிக்காமல் இருந்த ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு எந்த ஒரு சத்தமும் இல்லாமல் நடந்து வருகிறது.

இலங்கை தூதர்
இலங்கை தூதர் வெங்கடேஷ்வரன் நேற்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த் இலங்கை வர வேண்டும் என்றும் அங்குள்ள ராமாயண இதிகாசத்தில் தொடர்புடைய புனித தலங்களை பார்வையிட வேண்டும் என்றும் மேலும் இலங்கையில் உள்ள பாரம்பரிய கலாச்சார மத சின்னங்களை அவர் பார்வையிட இலங்கைக்கு வர வேண்டும் என்று இலங்கை தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

தற்போது உள்ள திரைப்படங்களை முடித்துவிட்டு கண்டிப்பாக இலங்கை வருவதாக ரஜினி உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

நடிகை மீரா ஜாஸ்மீன் அம்மாவை பார்த்துள்ளீர்களா?

ரன், சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் மீரா ஜாஸ்மின். தற்போது அவர் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.

அவர் தற்போது 40 வயதை கடந்த நிலையிலும் எல்லைமீறி கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார். தற்போது சினிமாவில் போட்டி அதிகம் இருக்கும் நிலையில் அதை சமாளிக்க தான் தாராள கவர்ச்சி காட்டி வருகிறாரா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

அம்மா போட்டோ
இந்நிலையில் மீரா ஜாஸ்மின் அவரது அம்மாவின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

அது தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ..

வயதில் குறைந்த பெண்ணை காதலிக்கும் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி.

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மோகன்.ஜி இயக்கத்தில் திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை மூன்றாவது முறையாக அதே கூட்டணி இணைய இருக்கிறது.

யாஷிகா ஆனந்த் உடன் காதல்
இந்நிலையில் தற்போது ரிச்சர்ட் ரிஷி பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக போட்டோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறார்.

யாஷிகா அவரை முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் ஒரு போட்டோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Richard Rishi (@richardrishi)

சார்பட்டா 2 குறித்து அப்டேட் கொடுத்த ஆர்யா

ஆர்யா
“விருமன்” படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் தான் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”.

இப்படத்தில் ஹீரோவாக ஆர்யா, ஹீரோயினாக “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும், ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.

சார்பட்டா 2
இந்நிலையில் கோயம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆர்யா மட்டும் நடிகை சித்தி இத்னானி “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படத்தை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில், ஆர்யாவிடம் அடுத்து நடிக்க இருக்கும் படங்களை பற்றி கேள்வி கேட்ட போது விரைவில் சார்பட்டா 2 திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் தயாராகிவிடும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என ஆர்யா அப்டேட் கொடுத்துள்ளார்.