கிளிநொச்சியில் தாய் மற்றும் மகனின் மோசமான செயல்!

கிளிநொச்சி பிரதேசத்தில் குடு போதைப் பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பனங்கண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டு சூழலை பொலிசார் சோதனை இட்ட பொழுதே தாயும் மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டயர் ஒன்றினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 கிராம் 75 மில்லி கிராம் நிறை உடைய குடு எனும் போதைப்பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய தாயும் மகனும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கைதான தாயும் மகனும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்