தினமும் காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் இதனை தெரிந்து கொள்ளுங்கள்

பொதுவாக தற்போது இருக்கும் அவசர உலகில் பசி எடுக்கும் பொழுது கையில் மாட்டும் ஒரே பொருள் பிஸ்கட் தான்.

காலையுணவிற்கு பதிலாக பிஸ்கட், டீ இவை இரண்டையும் சாப்பிடும் மக்களும் இருக்கிறார்கள்.

வெளியில் எங்கு சென்றாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பிஸ்கட் சாப்பிடுவார்கள்.

இத்தணை சந்தர்ப்பங்களில் உதவிச் செய்யும் பிஸ்கட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? என பலருக்கும் சந்தேகம் இருக்கும்.

அந்த வகையில் பிஸ்கட் சாப்பிடுவது ஆரோக்கியமானதா? என்பதற்கான விடையை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தினமும் பிஸ்கட் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

1. எவ்வளவு மூலப்பொருட்கள் பிஸ்கட்டில் கலந்திருந்தாலும் அது ஒரு வெற்று கலோரி என நிபுணர்க்ள கூறுகின்றனர். இதனால் தினமும் பிஸ்கட் சாப்பிடுவதால் எந்தவிதமான பயனும் இல்லை.

2. சிலர் வீடுகளில் காலையுணவாக பிஸ்கட் மற்றும் டீயை கொடுப்பார்கள். அந்த நேரத்தில் இருக்கும் பசியை போக்குமே தவிர அதனால் எந்த விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கபோவதில்லை.

3. தொடர்ச்சியாக சாப்பாட்டிற்கு பதிலாக பிஸ்கட் எடுத்து கொண்டால் பிஸ்கட்டில் இருக்கும் கோதுமை மலச்சிக்கல் பிரச்சினையை உண்டு பண்ணும்.

4. பிஸ்கட்டுகளில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், உடலில் அதிக ட்ரைகிளிசரைடு மற்றும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு பங்களிப்பு செய்யும்.

5. டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட பின்னர் சரியாக 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடுங்கள். ஏனெனின் டீயில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்பு சத்துக்கள் உணவிலுள்ள இரும்புச்சத்தை உறிஞ்சி வைத்து கொள்ளும்.

செஃப் தாமுவை அசிங்கப்படுத்திய விடிவி கணேஷ்

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோ 5ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்று வருகிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஸ்ட்ரீட் food செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் முதலில் போட்டியாளர்களுக்கு advantage டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் யார் அதிகம் பானி பூரி சாப்பிடுகிறார்களோ அவர்கள் தான் வின்னர் என கூறப்பட்டது.

அதில் விடிவி கணேஷ் ஜெயித்தார். அவரது கோமாளி 101 பாணி பூரி சாப்பிட்டு எல்லோரது பாராட்டையும் பெற்றார்.

தாமுவை அசிங்கப்படுத்திய விடிவி
இந்த டாஸ்கில் ஜெயித்தால் அடுத்து நடக்கும் மெயின் டாஸ்கில் விடிவி கணேஷுக்கு இரண்டு சலுகைகள் தரப்படுவதாக செஃப் தாமு அறிவித்தார். மற்ற போட்டியாளர்கள் 30 நிமிடம் உணவு பொருட்கள் உருவ பொம்மையை அணிந்துகொண்டு இருக்க வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் விடிவி 10 நிமிடம் மட்டும் அணிந்தால் போதும்.

அதே போல விடிவி கணேஷ் சொல்லும்போது நடுவர்களே வந்து 5 நிமிடம் சமைப்பார்கள் என்கிற சலுகையையும் அவர் கொடுத்தார்.

ஆனால் அது எல்லாம் எனக்கு தேவையில்லை என கூறி செஃப் தாமுவை அசிங்கப்படுத்தினார் விடிவி கணேஷ். Too many cook spoil the soup என எல்லோர் முன்பும் கூறி இருக்கிறார்.

விடிவி தன்னை அசிங்கப்படுத்தினாலும் அதை செஃப் தாமு பாராட்டவே செய்தார்.

கோலாகலமாக நடந்து முடிந்த எதிர்நீச்சல் திருச்செல்வம் மகள் திருமணம்!

எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய தொடர்.

கோலங்கள் தொடருக்கு பிறகு திருச்செல்வம் புரட்சிகரமான கதைக்களத்தில் இயக்கிய இந்த தொடருக்கு பெண்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்தது.

பெண் அடிமை,. ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடரில் கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா என 4 நடிகைகள் முக்கிய வேடத்தில் நடித்தார்கள்.

இப்போதெல்லாம் அவர்களின் நிஜ பெயர்களை தாண்டி கதாபாத்திர பெயர் மூலம் தான் மக்கள் அங்கீகாரம் செய்கிறார்கள்.

தற்போது தொடர் முடிவுக்கும் வந்துவிட்டது, இது ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகமான விஷயமாக தான் அமைந்துள்ளது.

இயக்குனர் மகள்
எதிர்நீச்சல் தொடர் முடிவுக்கு வந்த நிலையில் இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் தற்போது விசேஷம் நடந்துள்ளது.

அதாவது அவரது மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது, வரவேற்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதோ பிரபலம் பகிர்ந்து வீடியோ,

சூரியின் கருடன் வசூல் நிலவரம்!

கருடன் படம்
நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த மே 31ம் தேதி வெளியான திரைப்படம் கருடன்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயாரான இப்படம் தேனி மாவட்ட வட்டாரத்தில் நிகழும் கதையாக உருவான கருடன் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. சூரியின் நடிப்பும், சண்டைக் காட்சிகளும் அதிகம் பாராட்டப்படுகின்றன.

விடுதலை படத்திற்கே நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்த சூரிக்கு கருடன் படம் பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. காமெடியன் என்பதை தாண்டி இப்போது நாயகனாக ஸ்கோர் செய்து வருகிறார் சூரி.

பாக்ஸ் ஆபிஸ்
நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் நடிகர் சூரியின் கருடன் திரைப்படம் ரூ. 39 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

வரும் நாட்களிலும் வார இறுதி, பக்ரீத் விடுமுறை வருதால் படத்திற்கு நல்ல வசூல் வரும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்றைய ராசிபலன்கள் 10.06.2024

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். விற்பனையும் அதிகரிக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

கடக ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் திடீர் செலவுகளும், பணியாளர்களால் வீண் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப் பார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இன்று விநாயகர் வழிபாடு நன்று.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

கன்னி ராசி அன்பர்களே!

தேவையான பணம் கிடைக்கும். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப் பார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மகா விஷ்ணு வழிபடுவது நலம் சேர்க்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித் துச் செல்வது நல்லது. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக் கையுடன் இருக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று சரபேஸ்வரரை வழிபடவும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடி யும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனை அதிகரிக்கும். மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லதுஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே!

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும். சக வியா பாரிகளால் அனுகூலம் உண்டாகும். இன்று பைரவரை வழிபடுவது மிகச் சிறப்பு.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

மகர ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சி களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். அம்பிகையை வழிபடுவது நலம் சேர்க்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடிவதுடன், அத னால் எதிர்பார்த்த ஆதாயமும் கூடுதலாக இருக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகரை வழிபடுவது நன்று.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

மீனராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். அதிகப்படியான செலவுகள் ஏற்பட்டா லும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாப மும் அதிகரிக்கும். இன்று காலபைரவரை வழிபடுவது நன்று.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு!

மத்திய மலைநாட்டில் (Upcountry) கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசல்ரி மற்றும் மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமே இவ்வாறு நிரம்பியுள்ளது.

இன்றைய (08) நிலவரப்படி, காசல்ரி நீர்த்தேக்கத்தின் (Castlery Reservoir) நீர்மட்டம் வான்வெளி மட்டத்திலிருந்து 12 அடிக்கு உயர்ந்துள்ளது.

மின்சாரம் உற்பத்தி
இதேவேளை மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் (Maussakalle Reservoir) நீர்மட்டம் 11 அடிக்கும் மேல் நிரம்பியுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பதன் மூலம் 5 நீர்மின் உற்பத்தி நிலையங்களில் அதிகபட்ச கொள்ளளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி விமலசுரேந்திர, லக்சபான, நியூ லக்சபான, கனியன் மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர்மின் நிலையங்களில் அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என நீர்மின் நிலைய பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பொலிசார் அராஜகம்

யாழ் (Jaffna), குடத்தனை பகுதியில் கசிப்பு உற்பத்தி விற்பனை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டதுடன் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் நேற்று (07) இடம்பெற்றுள்ளது,

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறையினர் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம் பெறுவதாக பல வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர்.

தொலைபேசியால் ஒளிப்பதிவு
இந்நடவடிக்கையின் போது கு.சிந்துஜா என்பவரது வீடும் சோதனையிடப்பட்டுள்ள போது அங்கு கசிப்போ அல்லது வேறு எந்த பொருட்களும் அங்கு இருக்கவில்லை.

இதன்போது காவல்துறையினர் ஆய்வுகளை நடாத்திக் கொண்டிருந்த போது குறித்த பெண் தனது தொலைபேசியால் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கழுத்தை நெரித்தும் காலால் குத்தி

இதனை அவதானித்த காவல்துறை உறுப்பினர் ஒருவர் அந்த பெண்மணியிடமிருந்து தொலைபேசியை பறித்ததுடன் அவரின் கழுத்தை நெரித்தும் காலால் குத்தியும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தாக்குதலிற்க்குள்ளான பெண்ணிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் மருதங்கேணி காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறைக் கைதி தப்பி ஓட்டம்!

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காலி சிறைச்சாலை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வைத்தியசாலையின் கழிவறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கழிவறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கழிவறைக்குச் செல்வதற்காகக் கை விலங்குகளை அகற்றிய சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக்காகக் கழிவறைக்கு முன்பாகக் காத்திருந்தனர்.

எனினும், அவர் கழிவறையிலிருந்து பாய்ந்து தப்பிச் சென்றுள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காஞ்சனா 4ல் இவர் தான் ஹீரோயினா?

காஞ்சனா 4
ராகவா லாரன்ஸ் என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் படம் காஞ்சனா தான். முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

காஞ்சனா 4 வரும் என காஞ்சனா 3 படத்தின் இறுதியிலேயே ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். அதே போல் பல பேட்டிகளிலும் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

சமீபத்தில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தற்போது காஞ்சனா 4 பேச்சு தமிழ் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இவர் தான் ஹீரோயினா?
இந்த நிலையில், காஞ்சனா 4 திரைப்படத்தில் நடிகை மிருணால் தாகூரை கதாநாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.

எப்போதுமே ரசிகர்களை கவரும் வகையில் கதாநாயகிகளை தேர்வு செய்யும் ராகவா லாரன்ஸ், ரசிகர்களின் இந்த கோரிக்கையை ஏற்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

பாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீலீலா.

ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் சென்சேஷனல் நாயகியாக வலம் வருகிறார் ஸ்ரீலீலா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குண்டூர் காரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது தமிழில் அறிமுகமாகியுள்ளார். அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறாராம் நடிகை ஸ்ரீலீலா.

பாலிவுட்
இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில், தென்னிந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீலீலா, தற்போது பாலிவுட் பக்கம் தனது கவனத்தை செலுத்த துவங்கியுள்ளார்.

ஆம், நடிகர் சைப் அலிகான் மகன் இப்ராஹிம் அலிகான் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு திலர் என தலைப்பு வைத்துள்ளார்களாம்.

தொப்பையால் அவதிப்படுகிறீர்களா!

பொதுவாகவே அனைவருக்கும் தொங்கும் தொப்பையானது அதிகரித்துக்கொண்டே இருக்கின்ற நிலையில் இது பெரும்பாலும் தவறான உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது.

தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் தவிர இதற்குப் பின்னால் பல காரணங்களும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தூக்கமின்மை, மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பல சுகாதார நிலைகளும் தொப்பை கொழுப்பிற்கு காரணமாக இருக்கலாம்.

தொங்கும் தொப்பை தோற்றத்தை கெடுப்பது மட்டுமல்லாமல் பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிப்பதோடு தொப்பை கொழுப்பை குறைக்க, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை மற்றும் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

எடை குறைப்பு
நீங்கள் தொப்பையை எளிதில் குறைக்க விரும்பினால் நிபுணர்கள் கூறும் இந்த விடயங்களை பின்பற்றினாலே போதுமானதாக இருக்கும்.

கற்றாழை இன்சுலின் வெளியீட்டை அதிகரிப்பதோடு இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகின்றதோடு வெந்தய விதைகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன.

இவை சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து தொப்பையை குறைப்பதோடு கற்றாழையில் பக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு எடையையும் குறைக்கிறது.

உடல் பருமன்
உடல் பருமனை தடுக்கும் தன்மை கற்றாழையில் உள்ளதோடு இது உடலில் சேரும் கொழுப்பை குறைக்க உதவுவதுடன் மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளது.

இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து எடையைக் குறைப்பதுடன் வெந்தயம் கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. அத்தோடு இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.

மேலும், உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து, விட்டமின் சி மற்றும் இரும்புச் சத்துகள் கிடைக்கவும் உதவுகிறது.

தொங்கும் தொப்பை
தொங்கும் தொப்பையை குறைப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்
வெந்தய விதை – 1டீஸ்பூன்
புதிய கற்றாழையில் இருந்து கற்றாழை ஜெல் எடுக்க வேண்டும்.
1 கிளாஸ் தண்ணீரில் 2 தேக்கரண்டி கற்றாழை சேர்த்து கலக்கவும்.
அதனுடன் 1 தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சொத்து மதிப்பு!

யுவன் ஷங்கர் ராஜா
இசைஞானி இளையராஜாவின் மகனும் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளருமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் 1997ஆம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தீனா, காதல் கொண்டேன், பேரழகன், 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். இவர் இசையில் வெளிவந்த ஸ்டார் மற்றும் கருடன் இரு திரைப்படங்கள் வெளிவந்த மாபெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் GOAT திரைப்படத்தில் கைகோர்த்துள்ளார். புதிய கீதை திரைப்படத்திற்கு பின் இந்த கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

சொத்து மதிப்பு
இந்த நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

. எங்களுடைய பிரைவசியை மதிங்க!! வெங்கட் பிரபு வேதனை.

பிரேம்ஜி
சமீபத்தில் நடிகர் பிரேம்ஜி, இந்து என்ற பெண்ணுடன் ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் வைத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடக்கவுள்ளதாக பத்திரிக்கை ஒன்று வெளியானது.

மணப்பெண் இந்து, மீடியாவில் பணியாற்றி வருகிறார் என்று இணையத்தில் தகவல் வெளிவந்தது.

விளக்கம்
இது தொடர்பாக வெங்கட் பிரபு ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய இரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்! எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது.

“பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?” “சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?” இதை எல்லாவற்றையும் விட, “பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.

அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்! இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன.

மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்! BTW, THE GOAT அப்டேட் விரைவில்…

காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த சுனைனா!

சுனைனா
தெலுங்கு படங்களில் நடித்த வந்த சுனைனா, 2008 -ம் ஆண்டு நகுல் நடிப்பிடில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன் லத்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

திருமணம்?
இந்நிலையில் தற்போது 35 வயதான சுனைனா, லாக் என்று குறிப்பிட்டு ஒரு நபரின் கையை பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், யார் அந்த நபர்? அவரது முகத்தை காட்டுங்கள் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களுக்காக விரைவில் அடுத்த அப்டேட்டை சுனைனா வெளியிடுவார் என தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sunainaa (@thesunainaa)

ரசிகர்களின் செயலால் தனது வருத்தத்தை பகிர்ந்த ஜோதிகா!

ஜோதிகா
இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவுடனான திருமணத்திற்கு பின் 6 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் ரீ என்ட்ரி கொடுத்த சோலோ ஹீரோயினாக கலக்கி வந்தார்.

தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த ஜோதிகா தற்போது பாலிவுட்டில் ஜொலித்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு அங்கு பட வாய்ப்புகள் வருகிறது. சமீபத்தில் வெளிவந்த சைத்தான் திரைப்படம் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஜோதிகா :

“பாலிவுட் சினிமாவில் 25 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தேன். ஆனால், தற்போது எனக்கு பாலிவுட்டில் இருந்து இப்படி வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு ஏற்ற மாதிரியான கதை எதுவும் அமையவில்லை என்று தான் பாலிவுட்டில் நடிக்காமல் இருந்தேன்”.

“நல்ல கதை இருந்தால் பாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் கண்டிப்பாக நடிப்பேன். தென்னிந்திய – வட இந்திய என ரசிகர்கள் இந்திய சினிமாவை பிரித்து பார்க்க வேண்டும். தென்னிந்தியாவில் இந்தி திரைப்படங்களை அதிகமாக பார்க்கமாட்டார்கள்”.

வருத்தமாக இருக்கிறது
“ஆனால், வட இந்தியளவில் தென்னிந்திய திரைப்படங்களை அதிகம் பார்க்கிறார்கள். அதே போல் வட இந்தியாவில் ரஜிகாந்த் பற்றிய பதிவுகள் சமூக வலைத்தளத்தில் நிறைய டிரெண்டில் இருக்கிறது”.

“இந்திய சினிமாவில் இப்படி வித்தியாசங்கள் இருப்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது. வட இந்திய ரசிகர்கள், தென்னிந்திய ரசிகர்கள் என பிரியாமல் இந்திய ரசிகர்களாக அனைவரும் இருக்க வேண்டும்” என ஜோதிகா பேசியுள்ளார்.

செருப்பு இல்லாமல் நடப்பதற்க்கான காரணத்தை கூறிய விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்து பின் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என கலக்கும் பிரபலங்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி.

இவரது இசையில் வெளிவந்த நாக்கு முக்கா, ஆத்திச்சூடி, மச்சக்கன்னி, மஸ்காரா, மாக்காயேலா போன்ற பல பாடல்கள் இப்போதும் மக்களின் ஆல்டைம் பேவரெட் பாடலாக அமைந்து வருகிறது.

நான் படம் மூலம் நடிகரான இவர் சசி இயக்கிய பிச்சைக்காரன் படம் மூலம் சிறந்த நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ படம் வெளியான, படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் சொன்ன காரணம்
விஜய் ஆண்டனி அவரது மகளின் இறப்பிற்கு பிறகு ஒரு விஷயத்தை செய்து வருகிறார். அதாவது எங்கே வந்தாலும் காலில் செருப்பு இல்லாமல் தான் வருகிறார்.

இதுகுறித்து அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசும்போது, செருப்பு போடாமல் இருப்பது மனதிற்கு அமைதி தருகிறது, அது உடல்நலத்திற்கும் நல்லது, நமக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

நான் எப்போது செருப்பு இல்லாமல் சுற்ற ஆரம்பித்தேனோ அன்று முதல் எந்த விதமான நெருக்கடியான சூழலும் எனக்கு வரவில்லை.

வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்க விரும்புகிறேன், இது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது என பேசியுள்ளார்.

சிம்புவுக்கு ஜோடியாகும் அசின்!

சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிம்பு தற்போது உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பின் மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படமும் இதுவே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் சிம்பு கைவசம் STR 48 திரைப்படமும் உள்ளது. இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி தான் இப்படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுக்கு ஜோடியாக அசின்
நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்து பின் கைவிடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று AC. எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவாகவிருந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அசின் நடிக்கவிருந்தார்.

அப்படத்தின் First லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது!

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு ஏற்கனவே ஆராதனா மற்றும் குகன் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

ஆர்த்தி மீண்டும் கர்பமாக இருக்கிறார் என சமீபத்தில் வீடியோ உடன் தகவல் பரவியது.

ஆண் குழந்தை
இந்நிலையில் ஆர்த்திக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. அதை பற்றி சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

“எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.”

“ஆர்த்தியும் குழந்தையும் நலம்” என சிவகார்த்திகேயன் பதிவிட்டு இருக்கிறார்.

முடிவுக்கு வரப்போகும் சன்டீவியின் பிரபல சீரியல்!

எதிர்நீச்சல்
கோலங்கள் என்ற மெகா ஹிட் சீரியலை கொடுத்த திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.

கடந்த 2022ம் ஆண்டு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த தொடர் 700 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது கதையில் குணசேகரனால் அடக்கப்பட்ட பெண்கள் இப்போது துணிந்து தங்களது சொந்த காலில் நிற்க போராடி ஜெயித்துள்ளார்கள். இப்போது அவரவர் தொழிலில் எப்படி முன்னேறலாம் என்ற போராட்டத்தில் உள்ளார்கள்.

ஷாக்கிங் தகவல்
சமூகத்தில் பல பெண்கள் ஆணாதிக்கத்தால் அனுபவிக்கும் கஷ்டத்தை பேசும் தொடராக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் தற்போது முடிவுக்கு வர இருக்கிறதாம்.

வரும் ஜுன் மாதம் இந்த தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

முடிவுக்கு வருகிறது என்ற செய்தியே ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கிங்காக தான் உள்ளது.

நான்கு முறை திருமணம் செய்து கொண்ட நடிகை அஞ்சலி!

அஞ்சலி
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் அஞ்சலியின் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை வந்துள்ளது. நடிகை ஜெய்யுடன் அவர் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.

பிறகு அவரை பிரிந்துவிட்டதாகவும், தெலுங்கு திரையுலகில் உள்ள ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் ஒன்று பரவியது. இதற்கு நடிகை அஞ்சலி ரெஸ்பான்ஸ் செய்யாமல் இருந்தார். இந்த நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் திருமண சர்ச்சை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகை பேச்சு
இதில் “எனக்கு இதுவரை நான்கு முறை சமூக வலைத்தளங்களில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். நான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக முன்பு வதந்திகள் வரும்போது எனது வீட்டில் ரொம்பவே கவலைப்பட்டார்கள். ஆனால், இப்பொது அதற்கெல்லாம் அவர்கள் பழகிவிட்டனர்.

இந்த வதந்திகள் எல்லாம் வந்த பிறகு, உண்மையாகவே ஒருவரை நான் திருமணம் செய்துகொண்டு எனது வீட்டார் முன் போய் நின்றால்கூட அவர்கள் அதனை நம்ப மாட்டார்கள். என்னுடைய திருமணத்திற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. சினிமாவில் தான் இப்போது பிஸி” என அஞ்சலி கூறியுள்ளார்.