ரசிகர்களின் செயலால் தனது வருத்தத்தை பகிர்ந்த ஜோதிகா!

ஜோதிகா
இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவுடனான திருமணத்திற்கு பின் 6 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் ரீ என்ட்ரி கொடுத்த சோலோ ஹீரோயினாக கலக்கி வந்தார்.

தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த ஜோதிகா தற்போது பாலிவுட்டில் ஜொலித்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு அங்கு பட வாய்ப்புகள் வருகிறது. சமீபத்தில் வெளிவந்த சைத்தான் திரைப்படம் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஜோதிகா :

“பாலிவுட் சினிமாவில் 25 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தேன். ஆனால், தற்போது எனக்கு பாலிவுட்டில் இருந்து இப்படி வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு ஏற்ற மாதிரியான கதை எதுவும் அமையவில்லை என்று தான் பாலிவுட்டில் நடிக்காமல் இருந்தேன்”.

“நல்ல கதை இருந்தால் பாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் கண்டிப்பாக நடிப்பேன். தென்னிந்திய – வட இந்திய என ரசிகர்கள் இந்திய சினிமாவை பிரித்து பார்க்க வேண்டும். தென்னிந்தியாவில் இந்தி திரைப்படங்களை அதிகமாக பார்க்கமாட்டார்கள்”.

வருத்தமாக இருக்கிறது
“ஆனால், வட இந்தியளவில் தென்னிந்திய திரைப்படங்களை அதிகம் பார்க்கிறார்கள். அதே போல் வட இந்தியாவில் ரஜிகாந்த் பற்றிய பதிவுகள் சமூக வலைத்தளத்தில் நிறைய டிரெண்டில் இருக்கிறது”.

“இந்திய சினிமாவில் இப்படி வித்தியாசங்கள் இருப்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது. வட இந்திய ரசிகர்கள், தென்னிந்திய ரசிகர்கள் என பிரியாமல் இந்திய ரசிகர்களாக அனைவரும் இருக்க வேண்டும்” என ஜோதிகா பேசியுள்ளார்.