பிரித்தானியாவில் கடந்தமாதம் தமிழ் குடும்பம் ஒன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலின் கண்காணிப்பிக் கமெரா பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியிலேயே கடந்த யூன் மாதம் 15 ஆம் திகதி இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அன்றைய தினம் குறித்த தமிழ்க் குடும்பத்தின் வீட்டுக் கதவை அந்த மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். கதவைத் திறந்து யார் என்று பார்த்த வீடு உரிமையாளருக்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு அவரைச் சரமாரியாகவும் தாக்கியுள்ளனர். பின்னர் அவரது தாயாரையும் தாக்கிவிட்டு விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, இந்த தாக்குதல் கறுப்பினத்தை சேர்ந்த இரு இளைஞர்களால் திட்டமிட்டு மிகவும் மோசமான தாக்குதல் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் அது தொடர்பில் உடனடியாக Harrow பகுதி பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.