சைக்கிளில் வந்தது பற்றி விஷால் கொடுத்த விளக்கம்

நடிகர் விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கி அரசியல்கள் களமிறங்கி விட்டார். அதனை தொடர்ந்து விரைவில் தானும் அரசியலில் நுழைவேன் என அறிவித்தார் விஷால்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விஷால் சைக்கிளில் வாக்களிக்க வந்தார். முந்தைய தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்த நிலையில், அதை விஷால் அப்படியே காபி அடித்துவிட்டார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

விஷால் பதில்
இந்நிலையில் நடிகர் விஷால் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். ‘என்னிடம் வேறு வண்டி இல்லை. அப்பா, அம்மாவுக்கு ஒரு வண்டி இருக்கிறது. மற்றதை விற்றுவிட்டேன்.

இப்போது இருக்கும் ரோடு கண்டிஷனுக்கு வண்டி சஸ்பெண்க்ஷனை வருடத்திற்கு மூன்று முறை மாற்ற முடியாது.

என்னிடம் காசு இல்லை. அதனால் சைக்கிள் வாங்கினேன் என கூறி இருக்கிறார் விஷால்.