தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி சேரும் படம் தற்காலிகமாக தலைவர்171 என அழைக்கப்பட்டு வருகிறது.

படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என முன்பே லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

டைட்டில் – கூலி
இந்நிலையில் டைட்டில் அறிவிப்பு வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. “கூலி” என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே வெளியான போஸ்டர்களில் ரஜினி கையில் கடிகாரங்களால் விளங்கு போட்டிருப்பது போல காட்டப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.