பெய்ஜிங்: சீனா குளோனிங் முறையில் பல மடங்கு வலிமையான நாய்களை உருவாக்கியுள்ளது. இதே தொழில்நுட்பத்தை வைத்து படைவீரர்களை உருவாக்க சீனா முடிவு செய்துள்ளது.

அறிவியல் வளர்ச்சியில் நாளும் ஒரு கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வரும் மனிதகுலம் மனித சக்திக்கு மாற்றாக பல மடங்கு வேகத்துடன் செயல்படும் ரோபோக்களை கண்டுபிடித்துள்ளது. சீனா ஜப்பான் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ரோபோக்கள் வீட்டு வேலைகளை செய்ய பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சில நாடுகளில் ரோபோக்கள் மருத்துவமனைகளில் உதவிக்காக வைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில நாடுகளில் ரோபோக்களே ஆப்ரேஷன் செய்யும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை மாற்று சக்தியை மட்டுமே உருவாக்கிய மனிதர்கள் தற்போது மாற்று உயிரையும் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.