கிளாமர்யின்றி நடிப்பதற்கு ஓகே சொல்லும் இயக்குனருக்கு நயன்தாரா ஓகே சொல்லும் முடிவில் ……….

nayantara-stills0518

தமிழில் கைவசம் சில படங்களை வைத்துள்ள நயன்தாரா, தற்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

சமீபத்தில் சீனியர் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என செய்திகளும் வெளியாகின. ஆனால், தெலுங்கு வாசிகள் ஹிரோயின் படு கிளாமராக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள். இது நயன்தாராவிற்கு சற்று கலக்கத்தை தந்துள்ளது.

ஏனெனில் தமிழ் சினிமாவில் நாயகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் நடித்துவிட்டு தெலுங்கில் கிளாமராக நடித்தால் இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமோ என சிந்திக்கிறாராம்.

ஆனால், தனக்கு வயது அதிகரிப்பது வெளியே தெரிவதால் தனக்கு சரிப்பட்டு வரும் படங்களில் மட்டும் நடித்து கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளாராம்.

அப்படியென்றால் கிளாமர்யின்றி நடிப்பதற்கு ஓகே சொல்லும் இயக்குனருக்கு நயன்தாரா ஓகே சொல்லும் முடிவில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது