இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி கிடையாது என்றும் இந்தியாவுக்கு என்று எந்த ஒரு தேசியப் போட்டியும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைவரும், இந்தியாவுக்கு தேசிய போட்டி ஹாக்கி என்று கூறி வருகின்றனர். ஏனெனில் இந்தியா கடந்த 1960-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் கடந்த 1900-ஆம் ஆண்டு முதல் தங்கம்(9), வெள்ளி(7), வெண்கலம்(12) பதக்கங்கள் என மொத்தம் 28 பதக்கங்களை இந்தியா வென்றது.
அந்த காலக்கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளைத் தவிர மற்ற கண்டத்தைச் சேர்ந்த ஒரே அணியாக இந்தியா திகழ்ந்தது.
விளையாட்டை பொறுத்த வரை இந்தியா ஹாக்கி மூலம் அடையாளம் காணப்பட்டதால், இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என அனைவரும் நம்பினர்.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஐஸ்வர்யா பரேசார் என்பவர் இந்திய அணியின் தேசிய விளையாட்டு எது என கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து கடந்த 2012-ஆம் ஆண்டு ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியாவின் தேசிய விளையாட்டு எதுவும் இல்லை எனவும் கூறப்படுகிறது.