மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரக்கூடாது : சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு

இலங்கை அரசாங்கம் உண்மையான நல்லாட்சி நிர்வாகத்தையும் நல்லிணக்க செயற்பாடுகளையும் முன்கொணர்ந்து பிரச்சினைகளுக்கான அடிப்படைகளுக்கு தீர்வுக்காண வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் முக்கிய பிரச்சினைகளுக்கு செயற்பாடுமிக்க இணக்கங்களை காணவேண்டும் என்றும் அந்த குழு கோரியுள்ளது.

இலங்கையில் மீளமைப்புகள், அதிகாரப்பரவாலாக்கம் என்ற விடயங்களின் காரணமாக அனைத்து சமூகத்துக்கும் நன்மை கிடைக்கும் என்ற விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரத்து பேசவேண்டும்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்கவேண்டும்.

சட்டம் ஒழுங்கு மீளமைப்பு காரணமாக மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடந்த அரசியல் குற்றங்களை கண்டறிவதன் மூலம் சமூகங்களுக்கு இடையில் நன்மதிப்பை பெறமுடியும்.

காலங்கள் கடந்து செல்லும் நிலையில் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழியமைத்துவிடக்கூடாது என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு வலியுறுத்தியுள்ளது.

அதிகமான உறுதிமொழிகளை கூறி வெறுமனே தமது சொந்த நலன்களில் கவனம் செலுத்தாமல், நாளாந்தம் தீர்க்கமான அரசியல் மூலதனத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் இரண்டு ஆண்டுக்காலம் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் கட்சி நிலைக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கான தீர்வைக்காண வேண்டும்.

கூட்டு அரசாங்கம் பதவியேற்ற ஒன்பது மாதங்களில் முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் தற்போது அந்தக்கூட்டு அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் தோன்றி வருகின்றன.

எனவே தேசிய இனப்பிரச்சினைக்கான புதிய அரசியலமைப்பு மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு என்பவற்றை இது கேள்விக்குறியதாக்கியுள்ளது.

அரசாங்கத்தின் அங்கங்களான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரும் ஐக்கிய தேசியக்கட்சியினரும் திருப்திக்கொள்ளாத நிலையில் உள்ளனர்

இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிர்ப்பை வெளியிடுவது, முக்கிய மீளமைப்புக்களை நிராகரிக்க வழிவகுக்கும் என்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு சுட்டிக்காட்டியுள்ளது.