சீனா பறந்தார் ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவை சென்றடைந்துள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

சீன கெபிடல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இந்த சீனப் பயணத்தின் போது, அவருடைய மனைவி மைத்திரி ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் ரவூவ் ஹக்கீமும் இணைந்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய சென்றுள்ள நிலையில், ரணிலின் சீனப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

முன்னதாக இலங்கை கடற்பரப்பிற்குள் தமது நீர்மூழ்கி கப்பலை இந்த மாதம் நங்கூரமிட சீனா அனுமதி கோரியிருந்த போதிலும், இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

இது சீன அரசாங்கத்திற்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தாலும், இலங்கையுடனான நட்புறவு தொடர்ந்தும் பேணப்படும் என்று சீன அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், பிரதமர் ரணிலின் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.