ஐக்கிய தேசியக்கட்சியின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவை மீளமைப்புக்கு தயாராவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை வரைகாலமும் பிரமரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவை மீளமைப்புக்கு உடன்பட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் ரணில் விக்ரமசிங்க, அதற்கு எதிர்ப்புக்காட்டுகின்ற நிலைலேயே ஜனாதிபதி அதற்கு தயராகி வருவதாக ஆங்கில செய்தித்தாள் கூறுகிறது.
இந்தநிலையில் புதிய மாற்றத்தின்கீழ் சில அமைச்சுக்கள் வேறு அமைச்சுக்களுடன் இணைக்கப்படவுள்ளன.
பெரும்பாலும் இந்த மாற்றங்கள் அடுத்த வாரங்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அமைச்சரவை மாற்றத்திற்கு ஜனாதிபதியும், பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







