ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” என காலில் விழுந்த அமைச்சர்கள் எல்லாம் தற்போது அவ இவ என்று ஒருமையில் பேச ஆரம்பித்துவிட்டனர்.
இப்படி ஜெயலலிதாவை திட்டி பேசி சிக்கலில் மாட்டியிருப்பது சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா.
ஜெயலலிதாவினால் நேரடியாக பணியில் நியமிக்கப்பட்டவர் மீனாட்சி. இவரின் இடம் மாற்றுதலுக்காக ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக சரோஜா மீது புகார் கூறப்பட்டுள்ளது.
மீனாட்சியை நேரில் வரவழைத்த அமைச்சர் சரோஜா, உனது அப்பா ஜெயலலிதாவின் நண்பராக இருக்கலாம், அதெல்லாம் அந்தக்காலம், இப்போது சீனியர் அமைச்சர்கள் யாருமில்லை. உனது ஜெயலலிதாவோ செத்து தொலைந்து விட்டாள், இன்னொருத்தி பெங்களூரு ஜெயிலுக்கு போயிட்டா, அடுத்தவன் திகாரில் இருக்கிறான் என்று கூறியதாக பரபரப்பு பேட்டியளித்துள்ளார் மீனாட்சி.
இன்னும் 4 வருஷத்துல நான் ரூ. 4000 கோடி சம்பாதிக்கணும் என்றும் அதுவரை என் பணவெறி அடங்காது என்று மீனாட்சியிடம் கூறினாராம். உன்னால் ரூ. 20 லட்சம் தர முடியாது என்றால் விட்டு விட்டு போய் விடு என்று மிரட்டியதாகவும் மீனாட்சி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை காலில் விழுந்தும், அவரது கார் டயரை தொட்டும் கும்பிட்டனர் அமைச்சர்கள், பெண் அமைச்சர்களோ ஜெயலலிதாவை கடவுளாக பாவித்து வணங்கி வந்தனர்.
அவர் சிறையில் இருந்த போதும், உடல் நலக்குறைவோடு இருந்த போதும் மண் சோறு சாப்பிட்டனர், தீச்சட்டி ஏந்தினர். இப்போது அமைச்சர் சரோஜா, அவள், இவள் என்று ஏக வசனத்தில் ஜெயலலிதாவை பேசியதாக தனது பேட்டியில் கூறியுள்ளார் மீனாட்சி.







