நடிகர் விஜய் இந்து மதத்தை புண்படுத்தி விட்டதாக அவர் மீது இந்து மக்கள் முன்னணி பொலிசில் புகார் அளித்துள்ளது.
பிரபல திரைப்பட நடிகர் விஜய் தனது கையில் சூலாயுதத்தை வைத்து கொண்டு நடனம் ஆடுவது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் சில நாட்களாக பரவி வந்தது.
இந்நிலையில் திரிசூலத்தை விஜய் கையில் வைத்திருக்கும் புகைப்படம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி நடிகர் விஜய் மீது சென்னை காவல் ஆணையரிடம் இந்து மக்கள் முன்னணி புகார் அளித்துள்ளது.








