நரைத்த தலை முடியுடன் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 வீடியோக்கள் எந்நேரத்திலும் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா அங்கேயே மரணமடைந்தார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அப்பல்லோ சிகிச்சை வீடியோக்களை வெளியிட வேண்டும் என்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.
இதனிடையில், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது வீடியோ எடுக்கப்பட்டதாக சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனிடையில், ஜெயலலிதா சிகிச்சை சம்மந்தமாக 4 வீடியோக்களை அப்பல்லோ நர்ஸ் ஒருவர் எடுத்துள்ளதாகவும், அதை சசிகலா உறவினர் ஒருவர் பாதுகாத்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
அந்த வீடியோவில், நான் இங்க எவ்வளவு கஷ்டப்படறேன். உனக்கு எதாவது கவலை இருக்கா? என ஜெயலலிதா, சசிகலாவிடம் கேட்பது போல உள்ளதாம்.
மேலும், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே நடந்த விவாதங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
இது வெளியிட முடியாத அதிர்ச்சி ரகம் என கூறப்படுகிறது. எனினும், தங்கள் குடும்பத்தின் மேல் உள்ள கறையை போக்க சசிகலா கோஷ்டி வீடியோவை எந்த நேரத்திலும் வெளியிடலாம் என கூறப்படுகிறது.







