ஜெயலலிதாவின் புடவைகளோடு வாழும் சசிகலா!!

ஜெயலலிதா நினைவாக வைத்து கொள்ள அவர் அணிந்த பச்சை நிற புடவைகளை சசிகலாவுக்கு, விவேக் எடுத்து கொண்டு போய் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கபட்டுள்ளார்.

சசிகலாவுடன் அவர் அண்ணி இளவரசியும் சிறையில் உள்ளார். போயஸ் தோட்டத்தில் வசதியாக வாழ்ந்து வந்த சசிகலா கொசுக்கடி, சாப்பாடு சரியில்லை போன்ற விடயங்களால் சிறையில் திணறி வருகிறார்.

மேலும், கட்சியும், ஆட்சியும் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்ற விடயமும் சசிகலாவை வாட்டுவதால் அவருக்கு ஏற்கனவே இருக்கும் சில நோய்களை அது தீவிரப்படுத்தி விட்டதாம்.

இதனிடையில், தன்னை சிறையில் வந்து அடிக்கடி பார்க்கும் இளவரசியின் மகன் விவேக்கிடம் சசிகலா, எனக்கு ஜெயலலிதாவின் நினைவாகவே உள்ளது.

அவர் அணிந்த பச்சை நிற புடவைகளை கொண்டு வா என கூறியுள்ளார்.

இதையடுத்து பச்சை நிற புடவைகளை விவேக் எடுத்து போய் சசிகலாவிடம் கொடுத்துள்ளார்.