இரட்டை குடியுரிமை கொண்டுள்ளதால் கீதா குமாரசிங்க இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ள 11 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காலி மாவட்டத்தில் தாக்கல் செய்த வேட்பாளர் பட்டியலும் செல்லுப்படியாகாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியலில் உள்ள ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்றால், முழு வேட்பாளர் பட்டியலும் நிராகரிக்கப்படும்.
அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட மனோஜ் பிரசன்னவும் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் 5 பேரும் காலி மாவட்டத்தில் 6 பேரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.







