சொந்த செலவில் சூனியம் வைத்த மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே, முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு குறைக்கப்பட வேண்டுமென நீதிமன்றின் உத்தரவு பெற்றுக் கொண்டார் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் தாதியர் பயிற்சிக் கல்லூரியின் புதிய கட்டட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு பற்றி பேசப்படுகின்றது.

எனினும் மஹிந்த ராஜபக்சவே, முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து தீர்ப்பு பெற்றுக்கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு 30 பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு வழங்குதல் போதுமானது என மஹிந்த நீதிமன்றின் மனுத் தாக்கல் செய்து தீர்ப்பு பெற்றுக் கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ச குண்டுத் தாக்குல்களினால் பாதிக்கப்படவில்லை என டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.