ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான காலம் நெருங்கி விட்டது என்றும் அதற்கான சரியான நேரத்தில் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மே தினக் கூட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அணியில், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பேரணியில் ஆதரவினைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்ச இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுவருகின்றார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனையடுத்து சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கியில் செவ்வியில்,
ஆட்சி அதிகாரங்கள் எப்படி கைமாறும் என்பது தொடர்பில் என்னைப் போல வேறு எவரும் அறிந்து வைத்திருக்க முடியாது.
தற்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் தெரியும். இந்த நாட்டின் ஆட்சியினைக் கைப்பற்றுவதற்கான நேரம் கனிந்து வந்து கொண்டிருக்கிறது. அதனை என்னால் உணர முடிகிறது.
என் கரங்களில் இருந்து ஆட்சி கை நழுவிச் செல்லவில்லை. நான் கடந்த தேர்தலின் போது உத்தியோகபூர்வமான முடிவுகள் வெளிவர முன்னரே என் வீட்டிற்குச் சென்றிருந்தேன்.
இந்நிலையில் தான், இப்பொழுது மீண்டும் எங்கள் பிடிக்குள் சரியான நேரம் வந்திருக்கிறது. அந்த தருணத்தை தக்கவாறு பயன்படுத்திக் கொள்வோம்.
இந்த ஆட்சியை கவிழ்த்து எமது ஆட்சியைக் கொண்டுவருவதற்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்.
எப்படியான அணுமுறைகளில் அதைச் செய்ய வேண்டும் என்பதையும், அது மிகமிக நுணுக்கமாக செய்வதற்கான நேரத்தில் செய்து முடிப்போம். இந்த ஆட்சியை மாற்றி எங்கள் ஆட்சியைக் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.







