உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தமொன்றை உள்வாங்கக்கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட போதே கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் சட்டம் தொடர்பாக பிவித்துரு ஹெல உறுமய தமது யோசனைகளை முன்வைக்க உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்க உள்ளோம்.
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான திருத்தங்களை முன்வைத்து நீதியான தேர்தல் ஒன்றை நடத்த ஏதுவான நிலையை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.







